பக்கம்:நல்ல தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அமைதிகள் 97 றனர். கண்ணுள்ளவர் இவற்றின் நுண்மைகளைக் கண்டு அறிந்து மொழியின் நிலையைக் கெடாது காப்பாராக. இவ்வினாவைப் போன்றே விடையையும் நன்கு பகுத்து ஆராய்ந்துள்ளார்கள். அது பற்றிய சூத்திரத்தை மட்டும் கூறி அமைகின்றேன். "சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்ற துரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும் எண் இறையுள் இறுதி வினவிய ஐந்தும் அப் பொருண்மையி னேர்ப’ (386) என்பது நன்னூல். இது மேற்கண்ட ஐவகைப் பட்ட வினா வினாவுக்கு இந்த எட்டு வகையிலும் விடை கூறும் வகை யினைக் காட்டுகின்றது. சுட்டியும், மறைத்தும், நேராகவும், வினவாகவும், ஏவல் முறையிலும், உற்றதைக் கூறியும், வரப் போவதைக் காட்டியும், இன மொழியினாலும் விடைகளைக் கூறுவார்கள்,' என்பது உரை, எனவே, எதையும் எப்படியும் கேட்கலாம் என்பது தவறாகும் என்ற உண்மையை உணர்ந்து, ஆன்ற வகையில் அமைந்த முறையில் வினாவின் நிலை அறிந்து விடை இறுக்கப் பழக வேண்டும் என வரை யறுத்த நெறி சிறந்தது. இந்த முறையில் பேசத் தெரியாத காரணத்தினாலேதான் பலர் தவறிச் சொற்சோர்வுபடுகின் றனர். தமிழில் பேசப் போனாயோ சாகப் போனாயோ!' என்று ஒரு பழமொழி உண்டு. அதன் கருத்து என்ன? பேசும் போது எண்ணி, முன் உள்ளவர் தவறாகப் புரிந்துகொள்ளா வகையில் பேச வேண்டும். அல்லாவிட்டால் பெருந்தொல் லைகள்- சில சச்சரவு அளிக்கும் கொடுமைகள்-நிகழ்வ துண்டு. முன்னின்று பேசும் முறையே ஒருவரது பண்பு முதலியவற்றை விளக்கும். நாவடக்கி, கேட்பாருக்குத் தக்க வகையில்-அவர்தம் மனம் கொள்ளும் வகையில்-பேச வேண்டும். அவ்வாறு பேச இயலாவிட்டால், வாய் மூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/101&oldid=774999" இலிருந்து மீள்விக்கப்பட்டது