பக்கம்:நல்ல தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நல்ல தமிழ் மெளனியாகி இ ரு ப் ப்தே மேல். இவற்றையெல்லாம் எண்ணித்தான் திருவள்ளுவன்ார், 'யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு'. என்று எடுத்துக் கூறிச் செம்மையான முறையில் பேச வேண்டும் எனக் காட்டினார். பேசுவதற்கு மட்டுமன்றி, எழுதுவதற்கும் இவ்வுண்மை பொருந்துவதாகும். தமிழில் சில சொற்களைப் பயன்படுத்துவதற்கும் வரை யறை செய்துள்ளார்கள். ஒன்றைக் கண்டு அமைவோம். ஒரு பொருள் நமக்குத் தேவை. அது அயலான் ஒருவனிட மிருக்கின்றது. அவன் நம்மினும் மிக்கவனாகவும் இருக்க லாம்; ஒத்த நண்பனாகவும் இருக்கலாம். தாழ்ந்த பணி யாளனாகவும் இருக்கலாம்; இம்மூவரையும் ஒரே வகையில் விளித்து அதைத் தருமாறு கேட்லாமா? ஆங்கிலத்தில் 'Give it" என்று சொல்லுவார்கள். மரியாதையாகச் சொல்ல வேண்டுமானால், Please give it என்று ஒரு சொல்லை வருவித்துக் கொள்ளவார்கள். தமிழில் அந்தத் தேவை இல்லை. சொற்களின் இயல்பே உயர்ந்தோர், ஒப்போர். தாழ்ந்தோர் நிலையைக் காட்டிவிடுகின்றது. 'ஈ தா கொடுஎனக் கிளக்கும் மூனறும் இரவின் கிளவி ஆகிடன் உடைய. (928) என்று கூறி, அவற்றுள் 'ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே: "தாவென் கிளவி ஒப்போன் கூற்றே: கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. - (929–31) என வரையறுத்தார் தொல்காப்பியனார். இவற்றையெல் லாம் ஒன்றாகத் தொகுத்த நன்னூலாசிரியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/102&oldid=775001" இலிருந்து மீள்விக்கப்பட்டது