பக்கம்:நல்ல தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அமைதிகள் 99 'ஈதா கொடுவெனு மூன்றும் முறையே இழிந்தோன ஒப்போன் மிக்கோன் இரப்புரை. (407) என்று காட்டியுள்ளார். இவற்றாலெல்லாம் நாம் அறிவது யாது? முறை கெடாதபடி தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையினையே இவை வற்புறுத்து கின்றன அல்லவா? உயர்ந்தோன் தாழ்ந்தோனை நோக்கி, ஐயா, அதை ஈவாயோ?” என்று கேட்டால், நாட்டார் நகைக்க மாட்டார்களோ? அவன், அதைக் கொடு என்று கேட்க வேண்டும். அப்படியே ஒத்தவனிடத்தில் அதைத் தா. எனக் கேட்டுப் பெற வேண்டும். தாழ்ந்தோனே உயர்ந்தோன் ஈகைக்கு ஏங்கி நின்று, 'ஐயா, அதை எனக்கு ஈதல் வேண்டும்,' என இரக்க வேண்டும். இவற்றை விளக் கும் போது இரண்டு ஆசிரியர்களும் ஓர் உண்மையை மறைத் துக் காட்டியுள்ளார்கள். யார் யாரைக் கேட்டாலும் அது பிச்சையேயாகும் என்ற உண்மையை இரத்தல்' என்ற சொல்லால் விளக்கிவிட்டார்களல்லவோ! "கெளரவப் பிச்சை என்று இக்காலத்தில் கூறுவார்கள். அது போல உயர்ந்தவன் தனது இல்லாத காரணத்தால் ஒரு பொருளைத் தன் கீழ் உள்ளவனிடம் ஆணை வழியாகக் கொடு' என்று பிடுங்கிக்கொண்டாலும் அதுவும் ஏற்றலே என்ற உண்மை யைத் தொல்காப்பியரும் பவணந்தியாரும் எடுத்துக் காட்டத் தவறவில்லை இவ்வாறு இலக்கண அமைதி கூற வந்த இடத்தும், மரபும், பண்பும், முறையும், நிலையும், பிற இயல் புகளும் கெடா வகையில் எடுத்துக் காட்டும் நெறிகள் அள விடற்கரியன. அவற்றையெல்லாம் எழுதிக் காட்டல் என் பது இயலாது. மெள்ள மெள்ள மரபு வழியறிந்து பயின்று, எழுதி அல்லது பேசிப் பழகி, நல்ல தமிழ் வளர்த்து வல்ல வராதல் வேண்டும். இனி, இந்த மரபு நிலை பற்றியும் பிற சிறப்பியல்புகளைப் பற்றியும் காண்போம். பிழையற்று எழுதச் சில வழிகளையும் காணல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/103&oldid=775002" இலிருந்து மீள்விக்கப்பட்டது