பக்கம்:நல்ல தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மரபின் வழியே தமிழ் எழுத்துக்களின் அமைப்புத் தொடங்கி, இது வரை, அவ்வெழுத்துக்களின் நிலை, அவற்றால் ஆக்கப்படும் சொற்கள், அவற்றின் பாகுபாடு, அச்சொற்கள் சேரும் முறை, அம்முறையாகிய புணர்ச்சியில் உள்ள பல வகைகள் அச்சொற்களாலாகிய தொடர்கள், அவற்றின் பிரிவுகள் அவற்றின் மாறுபாடுகள், அவை செம்மையாக அமை யும் முறைகள் ஆகியவற்றைக் கண்டு கொண்டே வந்தோம். இனி, பல சட்ட திட்டங்களுக்கு இடையிலும் அச்சொற்றொடர்களில் உண்டாகும் தவறுகளையும், அவற்றின் வழி மொழியின் நலம் கெடுவதையும்காண்போம். மற்றும் இந்த இலக்கண விதிகளின் எல்லைக்குப் புறம்பாக அமையும் சில அமைதிகளையும் காணல் நலம். சில சாதாரண எழுத்துப் பிழைகளையும் எண்ணிப் பார்த்தல் அவசியமாகும். புணர்ச்சி விதிப்படி பலர் எழுதப்பழகாத காரணத்தால் மிக எளிமையாக உணரக்கூடிய பிழைகளும் நேர்கின்றன என்பதை முன்னமே கண்டோம். 'வாழைபழம், கடை பிடித்து, பள்ளிக்கு சென்றான், என்பன போன்ற சாதாரண அமைப்புக்களிலும் சந்தியில் வரவேண்டிய எழுத்துக்களை (க், ச், த், ப்) விடுத்துக் கற்றவரும் எழுதுவதைக் காண் இறோம். அவற்றை ஒரு முறை திருப்பிப் படிப்பார்களாயின் நிச்சயம் அவை அவர்களுக்குப் புலப்படாமல் போகா, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு, எழுதிய விடை களைத் திரும்பப் படித்தல் அவசியம்,' என்று சொல்லி அனுப்புவது போன்றே வேறு சிலருக்கும் சொல்ல வேண்டி யுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/104&oldid=775004" இலிருந்து மீள்விக்கப்பட்டது