பக்கம்:நல்ல தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபின் வழியே 101 தமிழில் ஏறக்குறைய ஒரே ஒலியை உடைய எழுத்துக் கள் சில இருக்கின்றன. அவற்றை உச்சரிக்கும் போதும் சொற்களோடு அவற்றைப் பிணைக்கும் போதும் பலர் பெருந்தவறுகள் செய்கின்றனர். கதவைத் திரக்க என்று எழுதிருப்பதைக் காண்கிறோம். ஆங்கிலத்தில் இம்மாதிரி யான சாதாரணப் பிழைகளைக் கண்டால் நாம் கோபிக் கின்றோம். ஆனால், நம் தாய் மொழியில் மிகச் சாதாரண மான பிழைகளையும் எழுதுகின்றோம். அரம்', 'அறம்' என்ற இரண்டு சொற்களுக்கும் வேற்றுமை கருதாமல் எழுதுபவர் பலர் உளர். சிலர் 'ர, ற என்னும் இரண்டு எழுத்துக்களே தேவையில்லை; ஒன்றே போதும்,' என வாதிடுவர்; அப்படியே ந, ன, ண என்ற மூன்றைப் பற்றி யும் வாதிப்பர். இது வரையில் நாம் வகைப்படுத்தி வந்த மொழியிலக்கண முறையைக் கவனித்தால், இப்பிரிவுகள் மொழிக்கு எத்துணைப் பேருதவியாய் இருக்கின்றன என்பது சொல்லாமலே விளங்குமல்லவா? சற்று எண்ணி எங்கு எதைப் பயன்படுத்துவது என அறியச் சோம்பி நம் விருப்பப் படி எழுத்துக்களை மாற்ற வேண்டுமென்று மொழித்திறம் அறிந்த யாரும் கூறமாட்டார். ஒரு சில வேறுபாடுகளை இங்கே குறித்துவிட்டு மேலே செல்லுகின்றேன். IJ ற அரம் - ஒரு கருவி அறம் - தருமம் அலரி - ஒரு மலர் அலறி - பயத்தால் கதறி இரங்கு - இரக்கப்படு இறங்கு - கீழ் இறங்கு கரை - வெண்மயிர் கறை - தேன் திரை - அலை திறை - கப்பம் இப்படி இரண்டு எழுத்துக்களின் அமைப்பில் எத்தனை யோ சொற்கள் வந்துள்ளன. அவற்றின் இடமும் பொருளும் அறிந்து நன்கு உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/105&oldid=1508107" இலிருந்து மீள்விக்கப்பட்டது