பக்கம்:நல்ல தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நல்ல தமிழ் அப்பழக்கம் பல நல்ல அறிஞர்களுடைய நூல்களைப் படிப் பதனால் தானாகவே வந்து சேரும். இந்த வேறுபாடுகளெல் லாம் எந்த இலக்கண நூலினும் விளக்கமாகக் கூறப்படா விடினும், பின்னால் வந்த நிகண்டு, திவாகரம் போன்ற நூல்களில் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. ஆயினும், இன்று அவைகளும் பலருக்குத் தெரிய வழியில்லை. அகராதிகள் பல வெளி வந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றை மனப் பாடம் செய்வதும் இயலாது. என்றாலும், செந்தமிழும் நாப்பழக்கம்' என்றபடி நல்ல நூல்களைப் பயின்று இவற் றைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். தமிழில் ‘ழ’ ஒரு சிறப்பெழுத்து. உலகில் எந்த மொழி யிலும் இல்லாத எழுத்து இது. ஆயினும், நம்முள் பலர் இந்த எழுத்தை உச்சரிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வாளப் பளம்” என்றும் மளை பெய்தது' என்றும் சிலர் பேசுகின்ற னர். பேசுவதோடு மட்டுமின்றிச் சிலர் அவ்வாறே எழுதவும் செய்கின்றனர். இது எத்துணைப் பெருந் தவறு! இரண் டொரு சொற்களைக் காண்போம். 'ஒழி’ என்பதற்கு நீக்கு என்பது பொருள். 'ஒளி' என்பதற்கு வெளிச்சம் என்பது பொருள். குழவி' என்பது குழந்தை: குளவி என்பது கொட்டும் வண்டு. இப்படியே பல. இந்த வேறுபாடு ஒரு புறம் இருக்க, தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகிய ‘ழ’ கரத்தைத் தமிழனே உச்சரிக்கவும் எழுதவும் தயங்குவானா யின், உலகம் அவனாப் பார்த்து நகையாதா! மரபு என்பது தமிழில் மட்டுமன்றிப் பிற பழைய மொழி களிலும் இன்றியமையாததாயுள்ளது. தொல்காப்பியத்தில் 'மரபியல்’ என்றே ஒர் இயல் வகுத்துள்ளனர். அதில் உலக வழக்கில் உள்ள பல பொருள்களின் பெயர்களை அப்படி அப்படியே வழங்க வேண்டும் என்று காட்டியுள்ளனர். ஒரு சிலவற்றைக் காட்டி அவ்வாறே பிறவற்றையும் பெறவைத் துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/106&oldid=775008" இலிருந்து மீள்விக்கப்பட்டது