பக்கம்:நல்ல தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபின் வழியே 103 "எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.’’ (338) என்று நன்னூலார் அந்த அடிப்படையிலே இலக்கணமும அமைத்துவிட்டார். ஒரறிவுடைய உ யி ரா.கி ய மரம் தொடங்கி ஆற்றிவுடைய மனிதன் வரையில் வகைப்படுத்தி, அவ்வவற்றின் கான் முளைகளை எவ்வெவ்வாறு வழங்க வேண்டும் என மரபு கூறியுள்ளது தொல்காப்பியம்; மற்றும் வழக்கில் உள்ள சில சொற்களையும் அவற்றின் பொருள் முறைகளையும் வகைப்படுத்தி உள்ளது. இலக்கண அமைப் பிலே காலந்தோறும் உண்டாகும் சில மாறுதல்களை ஏற்றுக் கொள்ள இடம் தரும் தொல்காப்பியர், இந்தச் சொற்களைப் பற்றிய மரபிலே மட்டும் திட்டமாக வரையறை செய்கிறார். ஆம்! இச்சொற்களே மொழியின் தொன்மையையும் சிறப் பையும் விளக்கப் பயன்படுகின்றனவே. இன்றும் இதனாலன் றோ இச்சொற்கள் எம்மொழியைச் சேர்ந்தன?’ என்ற ஆராய்ச்சியைச் சிலர் மேற்கொள்ள வேண்டியுள்ளது! எனவே, நல்ல தமிழ் எழுத வேண்டுமானால், வாக்கியங் களைப் பிழையற எழுதுவது மட்டுமன்றி, மரபு வகை கெடாமல் எழுதவும் பழகிக்கொள்ள வேண்டும். இலக்கணத்தில் வரையறுக்கப் பெறாவிட்டாலும் மரபு வழியே தமிழ் வாக்கியங்களில் சில அமைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் 'A' 'An என்ற இரண்டையும் எங்கெங்கே உபயோகிக்கிறோம் என்பது தெரியுமல்லவா? A, E, 1, 0, U என்பவற்றின் முன் an வருகின்றது. ஏனைய எழுத்துக்களின் முன் 'a' வருகின்றது. இப்படியே தமிழிலும் 'ஒரு', 'ஒர்’ என்ற இரண்டு சொற்களும், 'அது', அஃது. என்ற சொற்களும் வழக்கத்தில் உள்ளன. பள்ளிக்கூடத்தில் ஆங்கில இலக்கணம் கற்கப் புகும் ஆரம்ப மாணவனுக்கு அந்த ஆங்கில முறையைக் கற்றுக் கொடுப்பது போன்று, தமிழில் இந்த முறையைக் கற்றுக்கொடுப்பதில்லை. அதனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/107&oldid=775010" இலிருந்து மீள்விக்கப்பட்டது