பக்கம்:நல்ல தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நல்ல தமிழ் மாணவர் பலர் தவறு செய்கின்றனர். மாணவர் மட்டு மன்றி, நம்முள் பலரும் அறிந்தோ அறியாமலோ இத்தவறு செய்கின்றனர். இம்முறைகள் இலக்கண அமைதியால் சூத்திரம் காட்டி வரையறுக்கப்படவில்லையாயினும், மரபு வழியிலும் சொல்லும்போது இனிமைநலம் பயப்பது கருதியும் முறைப்படி எழுதுதல் நல்லதாகும். ஒர்' என்பதும் அஃது' என்பதும் வருமொழி முதலில் உயிர் எழுத்து வருங்கால் பயன்படுத்தப்பெற வேண்டும். பிறவிடங்கனில் 'ஒரு' 'அது' என்பன இடம் பெறும். ஒரு காடு - ஓர் ஊர் ஒரு மனிதன்- ஓர் இலை அது நாடு - அஃது உலகு இது காய் - இஃது உலக்கை தமிழில் பெண்பால் ஒருமையைக் குறிக்கும் ஒருத்தி' என்பதும் இங்கே நினைவுக்கு வருகின்றது. கற்றறிந்த வருள்ளும் சிலர் ஒருவள்’ என எழுதுகின்றனர். ஒருவன் என்பது ஆண்பாலாயின் ஒருவள் தான் பெண்பால்ாக வேண்டும் என்ற நியதி எங்கே? 'அன்' ஆண்பால் விகுதி, அள் பெண்பால் விகுதியாயினும், சிலவற்றிற்கு விதி விலக்கு உண்டல்லவா? 'கணவனு'க்குப் பெண்பால் கணவி’ என்று எழுதுவது இல்லையே! மனைவி' என்றே எழுது கிறோம். அதைப்போன்றே ஒரு சில இலக்கண முறைக்குப் பொருந்துமாயினும் உலகமுறைக்கு மாறுபட்டு நிற்கும். இல்லாள் என்ற பெண்பாற்பெயர் மனைக்கிழத்தி என்ற பொருள் தந்து சிறக்கின்றது. ஆனால், மனைத் தலைவனை ..இல்லான்' என்று சொல்லுவோமா? அதன் பொருள் ஒன்று மில்லாதவன்' என்று அல்லவா அமைகின்றது? இலக்கணப் படி அது தவறு அன்றாயினும், மரபு வழி தவறுதானே? எனவே, எல்லாவற்றிற்கும் சில விதி விலக்குள் உள்ளன. ஒருவனுக்கு ஒருத்தியும், கணவனுக்கு மனைவியும் பெண்பாற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/108&oldid=775012" இலிருந்து மீள்விக்கப்பட்டது