பக்கம்:நல்ல தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபின் வழியே 105 பெயர்களே. இந்தச் சிறப்பு விதிகள் ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் இருக்கக் காண்கிறோம். நான் இளமையில் கற்ற ஒன்று நினைவுக்கு வருகின்றது. பள்ளியில் கற்கும்போது ஆசிரியர் 'ly என இறுவன எல்லாம் adverb என்று சொன்னார்; பின்பு உதாரனத் கேட்டார். மாணவர் ஒருவர், Tiruchirappally என்றார். அனைவரும் நகைத்தனர். ஆசிரியர் பின்பு பொது விதியை யும் சில விலக்குகளையும் விளக்கினார். இப்படியே ஆங்கிலத்தில் உள்ள ஒருமை பன்மை விதி விலக்குகளையும் எடுத்துக் காட்டினார். எனவே, தமிழிலும் இந்த வகையில் உள்ள வேறுபாடுகளைப் பகுத்தறிந்து, இடமறிந்து நல்ல முறையில் எழுதப் பழக வேண்டும். தமிழில் ஒருவர் என்ற சொல் முக்கியமானது; ஆங்கிலத் திலும் பிற மொழிகளிலும் இல்லாத ஒன்று. இது மிக நுணுக் கமாகப் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணம் காண்போம்: தூரத்திலே ஓர் உருவம் வருகிறது. அந்த உருவம் ஆனா பெண்ணா என்பது தெரியவில்லை. அதை எப்படிக் குறிப் பது? அதோ வருகின்றவள் ஆணா பெண்ணா? என்று கேட்டால் கேள்விக்கே பொருள் இல்லை. அள் விகுதி யிட்டுக் கேட்டவர்ே பெண்ணாக்கி விட்டார். 'அன்' என்ற தும் அப்படியே. 'வருகின்றவர்’ என்றால் இந்த இடர், பாடு இல்லை. 'ஒருவர் என்ற அடிப்படையிலேதான் இந்தச் சொல்லும் இது போன்ற பிறவும் தோன்றின். இந்த முறையில் ஐயம் உண்டாவதையும் அதை மாற்றும் வழிகளையும் நன்னூல் பொதுவியலில் ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அவை யாவும். பழக்கத்தில் வருகின்றமை யின் அவற்றை நாம் இங்கு ஆராய வேண்டா. ஒவ்வொரு வரும் எழுதும் போதும் பேசும் போதும் இவற்றை நன்கு பயன்படுத்தப் பழகிக்கொள்வதே போதும். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/109&oldid=775014" இலிருந்து மீள்விக்கப்பட்டது