பக்கம்:நல்ல தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நல்ல தமிழ் 'ஒருவர்' என்ற சொல்லை எண்ணி எண்ணி மகிழ்கின் றார் குமரகுருபரர் அவர் சிவபெருமானைக் காண்கிறார். ஒரு பக்கம் ஆண் உருவும் ஒரு பக்கம் பெண் உருவும் காட்சி யளிக்கின்றன. எப்படிச் சொல்லுவது அவ்வுருவை? ஒருவன் என்னலாமா, அன்றி ஒருத்தி என்னலாமா?’ என எண்ணி எண்ணிப் பார்க்கிறார். திடீரென்று இந்த ஒருவர் என்ற சொல் அவர் முன் வந்து குதிக்கிறது. அவரும் மகிழ்ச்சியால் குதித்துப் பாடத் தொடங்கிவிட்டார். 'அருவருக்கும் உலகவாழ் வடங்க நீத்தோர் ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட மரு.அருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர் மண்எனும்எண் வகைஉறுப்பின் வடிவுகொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றாலவ் வுருவைஇஃது ஒருத்தன்என்கோ ஒருத்தி என்கோ! இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல்இல தெனில்யான்மற் றென் செய் கேனே!" என்று சிதம்பரத்தில் தாண்டவம் புரியும் ஆண்டவன் முன் நின்று பாடினார். இறைவனைப் பாடும் தம்மை மறந்த அந்த நிலையிலுங்கூட அறிஞர்கள் இலக்கண வரம்பை எண்ணி எண்ணி மகிழ்கின்றார்கள் என்றால், நாம் அவற்றை இடமறிந்து நன்கு பயன்படுத்தவாவது கற்றுக்கொள்ள வேண்டாவா! மரபு என்று முன்பு சொன்னேன் அல்லவா? இன்று பலர் அதைக் கையாளுவதில்லை. தொல்காப்பியர் அந்த மரபை வற்புறுத்தும் நிலையைச் சில மேற்கோள்களில் இங்குக் காட்டலாம் என நினைக்கிறேன். யானைத் தலைவனைப் பாகன் என்றும், ஆடு மாடு மேய்ப்பவனை இடையன் என் றும் சொல்ல வேண்டும். 'ஆட்டுப் பாகன்' என்று சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/110&oldid=775017" இலிருந்து மீள்விக்கப்பட்டது