பக்கம்:நல்ல தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபின் வழியே 107 வது தவறு. தென்னம் பிள்ளை, புளியங் கன்று என்று சொல்ல வேண்டும். தென்னங் கன்று என்று சொல்லலா காது. அதைப் பிள்ளை போல நாம் காப்பாற்றி வளர்க் கிறோமல்லவா! இதுவே அப்பெயருக்குக் காரணமாகலாம்: 'வாழை இலை’ என்பது சரி, பனை ஓலை’ என்றுதான் சொல்ல வேண்டும். தென்னை ஒலை' என்பது சரி. "புளியங் கிளை, தென்னை மட்டை என்பவை வழக்கு. இப்படியே எத்துணையோ சொல்லிக்கொண்டு போகலாம். எனினும், இந்த அளவிலே போதும் என அமைகின்றேன். தொல்காப்பியர் இலக்கணம் செய்வதற்கு முன்பே, எத்தனையோ இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்றும், அவற்றின் அமைதியைக் கண்டே அவர் இலக்கணம் வகுத் தார் என்றும், அவர் எழுதும் பல சூத்திரங்களிலிருந்து நாம் நன்கு அறிந்துகொள்கிறோம். எனவே, அவர் காலத்துக்கு முன்பே எத்தனையோ மாறுதல்களைப் பெற்று, அவர் காலத்தில் இந்த நிலையில் தமிழ் மொழியின் இலக்கணம் அமைந்தது என்பதை அவர் காட்டியுள்ளார். என்றாலும், மொழியில் காலந்தோறும் உண்டாகும் மாறுதல்களுக்கும் இலக்கணம் அமைய வேண்டும். அன்றேல், அம்மொழி வழக்கிழந்தோ வாழ்விழந்தோ அழிந்தொழியும் என்பது மொழி நூலோர் கண்ட உண்மை. தமிழ் அந்த நிலை எய் தாத காரணத்தால், அந்த மொழி காலந்தோறும் உண்டா கும் மாறுதல்களுக்கு இடம் தந்து செல்கிறது என்பது தேற்றம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே.” 6T65T நன்னூலார் இதை எண்ணியே ஒரு பொது விதியை இறுதியாகச் செய்தார். தொல்காப்பியரோ, எழுத்ததி காரத்தில் மட்டுந்தான் புறநடை கூறியுள்ளார். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/111&oldid=775019" இலிருந்து மீள்விக்கப்பட்டது