பக்கம்:நல்ல தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அமைதிகள் 95 தான் எழுதுபவர் நன்றாகக் கவனித்து எழுத வேண்டும். ஒர் எழுத்து மாறுவதாலே ஒரு சொல்லின் அல்லது வாக்கியத் தின் பொருளே மாறிவிடும்! உதாரணம் காண்போம்: திரும்புகிறான்’ என்பது தன்வினை: திருப்புகிறான்' என்பது பிறவினை 'ம்' என்றது ப் ஆகிய நின்றது. இந்த மாற்றம் வினையின் செயல் செய்யும் மனிதனையே மாற்றி விடுகின்றது, அல்லவா? அவனே திரும்புகிறான்' என்றும், 'அவன் மற்றவரைத் திரும்பச் செய்கிறான்' என்றும் விளங்கக் காண்கிறோமல்லவா? வருந்தினான்-வருத்தினான் இவற்றில் ந்’ என்ற தன் வினையின் எழுத்து, த் எனப் பிற வினையில் மாறுகின்றது. மாறுகிறான்-மாற்றுகிறான்:- இந்தத் தன்வினை பிற வினையில் மற்றொரு வேறுபாடும் காண்கிறோம். முன் கண்டவற்றுல் தன்வினையில் வரும் மெல்லின ஒற்று பிற வினையில் அதன் இனமான வல்லின ஒற்றாக மாறிப் பிற வினையாகின்றது. இதில் அந்த முறையில் அன்றி, வல்லின ஒற்று இரட்டிக்கிறது. இவ்வாறே சில அடிப்படை விதி களைக் கொண்டு சிந்தித்து எழுதத் தொடங்கினால் மிகவும் சாதாரணப் பிழைகளையெல்லாம் நீக்கி விடலாம். இவ்வாறே இன்னும் பல வகைகளில் வினைகள் மாறுபடு வதைக் காண்கிறோம். ஆங்கிலத்தில் நேரில் பேசுவதையும். அன்றி வேறுபட்டு மற்றவர் பேசுவதாகக் காட்டுவதையும் (Direct and indirect Speech) Bairé5, affarā65surrrtäsir. பள்ளிப் பிள்ளைகளுக்கு அந்த முறை நன்கு காட்டப்பெறும் நேர்க்கூற்றில் இருபுறம் எடுத்துக்காட்டு அல்லது மேற்கோள் ("...') குறியிட்டு எழுதுவதும், அயல் கூற்றில் என’ அல்லது என்று' என வினை முடித்து எழுதுவதும் ஆங்கில மரபு. தமிழிலும் அதே மரபைக் கையாளுவது சரியே. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/99&oldid=775223" இலிருந்து மீள்விக்கப்பட்டது