பக்கம்:நல்ல தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நல்ல தமிழ் வருகிறேன்’ என்ற உடன்பாட்டில் பொருள் சிறக்கும். இவற்றிற்கெல்லாம் ஆங்கிலத்திலே, சில கணித முறைக்கு வாய்பாடுகள் (Formulas) உள்ளன போன்று, சில வாய்பாடு கள் வரையறுத்து வைத்துள்ளார்கள். இவ்வாறு உடன்பாட்டு வினை எதிர்மறை வினைகளை வகைப்படுத்தி முறை கெடாத வகையில் மரபுப்படி தமிழில் அமைந்துள்ளதை அனைவரும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். தன்வினை பிறவினை என்ற இரு வகை வினைகளையும் நன்றாக அறிய வேண்டும். இவற்றுள் பலர் தவறுவதும் உண்டு. அரசன் கோயிலைக் கட்டினான்,' என எழுதுகின் றோம். முறைப்படி பார்த்தால் இது தவறு ஆகும். கட்டுதல் ஒரு தொழில். அதில் எத்தனையோ பணியாளர்-தச்சரும் கொல்லரும் பிறரும்-பங்கு கொண்டனர். எனவே, கட்டும் தொழிலை அரசன்மேல் ஏற்றல் எப்படிப் பொருந்தும்? ஆயினும், அவன் பொருளே கோயிலை உருவாக்கிற்று. அரசன் கோயிலைக் கட்ட உதவினவன்-பிறரைச் செய லாற்றத் தூண்டினவன். எனவே, இது பிறர் வினைக்கு ஊன்றுகோல் அல்லவா? எனவே, கட்டினான்’ என்பதைக் காட்டிலும் கட்டுவித்தான்' என்பது சிறப்பாக இருக்கிறது. முன்னது தன்வினை; பின்னது பிறவினை. இந்த வகையில் தன்வினைகளைப் பகுத்துக் காட்டச் சில விதிகளை இலக்கண நூலோர் வகுத்துள்ளார்கள். அவற்றின் விளக்கங்கள் வேண்டா. பெரும்பாலும் வி', 'பி' என்ற எழுத்துக்கள் தன் வினையோடு இணைந்தால் பிறவினையாகும் என்பது பொது விதி. - செய்தான் - செய்வித்தான் வந்தான் - வருவித்தான் எடுத்தான் - எடுப்பித்தான் இவ்வாறன்றி, தன்வினையில் உள்ள இரண்டோர் எழுத் துக்கள் மாறிப் பிறவினையாதலும் உண்டு. இந்த வகையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/98&oldid=775222" இலிருந்து மீள்விக்கப்பட்டது