பக்கம்:நல்ல தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அமைதிகள் 93 தாயுமானவர். எனவே, பலர் இடையில் அமங்கலச் சொல் லைச் சொல்ல மயங்கினர். அதற்குத் துணையாயிற்று மங்கலச் சொல். செத்தாரைத் துஞ்சினார்' என்றும், தாலி அறுவதை"த் தாலி பெருகிற்று' என்றும் சாவினை, மூதானந்தம்' என்றும் கூறினார் இவற்றைத் தொல்காப் பியர் அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல், (926) என் றார். இப்படியே பலரிடையில் ஒரு துறையில் பழகிய இரு வர் தம் கருத்தைப் பரிமாறிக்கொள்ளப் பண்பட்ட வகையில் பயன் படுத்தப் பயன்பட்டது குழுஉக்குறி. இது பெரும் பாலும் வணிகத்துறையில் பயன்படும் என்பர். எனினும், பிற துறைகளுக்கும் இது விலக்கு அன்று எனவே, இவையும் இவை போன்ற பிற இலக்கண அமைதிகளும் தமிழில் காலமும் இடமும் கருதி, தமிழர்தம் பண்பும் நாகரிகமும் கெடாத வகையில் பயன்படுகின்றன என்று கூறி மேலே செல்லலாம். வினையில் உடன்பாடு எதிர்மறை என்னும் இரண்டு. உண்டல்லவா? அவற்றையும் முறை அறிந்து பயன்படுத்த வேண்டும். வேண்டும்’ என்பது உடன்பாடு. வேண்டா' என்பது எதிர்மறை. சில வினைச்சொற்களுக்கு எதிர்மறை காணச் சிலர் சங்கடப்படுவர். மிகு பழங்காலந்தொட்டு, இன்னதற்கு இன்னது எதிர்மறை என வழங்கி வந்துள்ளார் கள். அவற்றையெல்லாம் யாரும்-எந்த இலக்கண நூலும்தொகுத்துக் காட்டவில்லை என்றாலும், பழக்கம் அறிந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும். வருவேன் என்ற உடன்பாட்டு வினைக்கு வாரேன் என்றும் வரமாட்டேன் என்றும் எதிர்மறை வினைகள் அமை வதைக் காண்கின்றோம். வாராநின்றேன்' என்ற ஒரு தொடர் சிலவேளை மயக்கத்தில் ஆழ்த்தும், வாரா எனத் தனியே பிரித்து வாராமல் நின்றுவிட்டேன்’ எனப் பொருள் கொண்டால் எதிர்மறை. ஒரு சொல்லாகவே கொண்ட்ால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/97&oldid=775221" இலிருந்து மீள்விக்கப்பட்டது