பக்கம்:நல்ல தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நல்ல தமிழ் முதலிய நலம் கருதியும் புதுப்புது அமைப்புக்கள்-வருமென வும் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் புற நடை களை அமைத்துள்ளனர். எனவே, செயப்பாட்டு வினை பிந்தியதாயினும், பின்பு வந்த பவணந்தியார் அதற்கும் இலக்கணம் வகுத்தார் என்பர். . . . இவ்வாறே இலக்கணத்தில் சில சொற்களை வெளிப் படையாக வழங்கலாகாது என் ப த ற்கு ம் இலக்கணம் செய்துள்ளார். அவற்றையும் கண்டு மேலே செல்லலாம். "இடக்கரடக்கல், மங்கலம், குழுஉககுறி, என்ற மூன் றையும், இலக்கண எல்லையில் அவை பொருந்தாவிட்டா லும், உலக வாழ்வு கருதி-அதில் அவை பயன் பெறும் நிலை கருதி-அவற்றையும் வழக்கில் உள்ள சொற்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றது நன் னூல். பலர் நடுவில் சிலவற்றைக் கூறாதிருக்க வேண்டும். சேக்கிழார் பண்பாடுள்ளவர்; அவர் பரவையாரைப் பாட நேர்ந்தது. பரவையார் குலத்தைக் கூற வேண்டும். என்ன செய்வார்? பண்பாடற்று வெளிப்படையாகக் கூற முடிய வில்லை-நாகரிகமாகப் பதியிலாக் குலத்து வந்தார்’ எனக் காட்டுவார். இது செய்யுள் வழக்கு. உலக வழக்கில் பள்ளி யில் பிள்ளைகள் ஆசிரியரிடம் வெளிக்குப் போகக் கேட்கும் முறையை நாம் அறிவோம். மலங் கழுவி வருதல்' என்பது நாகரிகமா? என்வே, கால் கழுவி வருதல்’ என்போம். இதை இலக்கணத்தில் இடக்கரடக்கல்' என்றார்கள். தொல் காப்பியர் இதை ‘மறைக்குங் காலை மரீஇய தொரால் (927) என்றார். அடுத்து நல்லதை வாயால் சொல்வார் களேயன்றிக் கெட்டதைத் தமிழர்கள் வாயாலும் சொல்ல மாட்டார்கள். கெட்டவர்களைக்கூடக் கெட்டவர்' என் னாது 'அவர் யாரோ என்று கூறுவது தமிழர் பண்பாடு. "கொல்லா விரதமெனக் கொண்ட வ. ர்ே நல்லோர். மற்றல்லாதார் யாரோ அறியேன் பாரபரமே என்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/96&oldid=775220" இலிருந்து மீள்விக்கப்பட்டது