பக்கம்:நல்ல தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அமைதிகள் 91 தாமே செய்ததாகக் கூறிக்கொள்வது தற்பெருமையின்பாற் படும். எனவே, செய்யப்பட்ட பொருள்மேல் அவ்வினையை ஏற்றித் தற்பெருமையையும் அதனால் உண்டாகும் செருக் கையும் குறைக்க இதைக் கையாண்டார்கள் என்று கொள்ள GUT D. கம்பராமாயணத்தில் அனுமன் தான் செய்த சிறப்புச் செயல்களை மற்ற வாணர வீரர்ாளுக்குச் சொல்ல நாணி னான் எனக் கம்பர் காட்டுகின்றார். இன்னும் இராமா யணத்திலும் சிந்தாமணியிலும் வேறொரு காரணமும் காட்டப் பெறுகின்றது. இராமன் முதல் முதல் தாடகையைக் கொல்லச் சென்றான்; கொன்றும் வெற்றி கண்டான். எனினும், இராமனுக்கு அதனால் சிறப்பு உண்டோ? இல்லை. எனவே, அவன் தாடகையைக் கொன்றான் என்பது-முதல் முதல் நடைபெற்ற போரில் ஒரு பெண்ணைக் கொன்றான் என்பது-அவனுக்கு இழுக்கு எனப் புலவர் எண்ணியிருக்க லாம். எனவே, அந்த வினையை இராமன்மேல் ஏற்றாது அவள்மேல் ஏற்றிக் கொல்லப்பட்டாள்" எனக் கூறியிருக் கலாம். இப்படியே சிந்தாமணியில் சீவகன் காந்தருவதத் தையை யாழ்ப்போரில் வென்றான் என்று கூற வேண்டும். அங்கேயும் ஆண்மை நிரம்பிய காப்பியத் தலைவனாகிய சீவகன் முதல் முதல் ஓர் பெண்ணை வென்றான் என்பதில் பெருமை இல்லையல்லவா? எனவே, சீவகன் வெற்றி கொண்டான்' எனக் கூறாது, காந்தருவதத்தை தோற்கடிக் கப்பட்டாள்,' எனக் கூற நினைத்திருப்பார் தேவர். எனினும், அதிலும் அவருக்கு ஒர் ஐயம் உண்டு. தத்தை சீவகன் அழகில் மயங்கியதை முன் சில பாடல்களால் அவரே காட்டியுள்ளமையின் அவள்மேல் தோல்வி மனப்பான்மையை அமைத்து, வீணையில் தோற்றவாறும் என முடித்தார். கம்பரிடம் இந்த முடிவுக்கு இடமில்லை. எனவே, அப்படியே செயப்பாட்டு வினையில் கூறினார். இப்படியே மொழியில் பல மாற்றங்கள்-காலம் கருதியும் இடம் கருதியும் பண்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/95&oldid=775219" இலிருந்து மீள்விக்கப்பட்டது