பக்கம்:நல்ல தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அடிப்படை அமைதிகள் வாக்கியம் அல்லது சொற்றொடர்கள் நன்கு அமை வதே மொழியின் சிறப்பு என்பதைக் கண்டோம் அல்லவா? அந்த வாக்கியப் பிரிவுகளை அறிந்துகொண்டதோடு அமை யாது, அவற்றின் பல்வேறு பாகுபாடுகளையும், இடமும் காலமும் பிறவும் நோக்க அவை மாறும் நெறிகளையும் நாம் அறிந்துகொள்ளுதல் நலம் என்றுகருதி அவ்வமைப்புக்களில் ஒரு சில காணலாம் என நினைக்கிறேன். வினையில் பல பிரிவுகள் உள்ளன என்பதை முன்னமே கண் டோம். இங்கே இன்னும் சில வேற்றுமைகளைக் காண்போம். ஒரே பொருளை இருவகையாகக் கூறலாம் நான் மரத்தை வெட்டினேன்”, மரம் என்னால் வெட்டப்பட்டது' என்ற இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் வெட்டினேன் வெட் டிப்பட்டது' என்ற இரண்டும் வினைகள். முதல் வாக்கியத் தில் நான் என்ற எழுவாய்க்கு ஏற்ப வெட்டினேன்' என்றும், இரண்டாவதில் மரம் என்ற எழுவாய்க்கு ஏற்ப வெட்டப் பட்டது' என்றும் உயர்திணைத் தன்மை ஒருமையும் அஃறிணைப் படர்க்கை ஒருமையும் பெற வினைகள் எடுத் தாளப்பட்டன. முன்னது செய்வினை; பின்னது செயப் பாட்டுவினை. இப்படி ஒரே கருத்தைத் தெரிவிக்க இரு வகையான வாக்கியங்கள் வருவானேன்? சற்று எண்ணிப் பார்த்தால், சில உண்மைகள் விளங்கலாம். இலக்கண அமைப்பில் தொல்காப்பியர் காலத்தில் செயப் பாட்டு வினை இல்லை என்பர். பின்பு அது தோற்றக் காரணம் என்ன? சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைக் காணும் போது ஒரளவு இதன் காரணத்தை அறிய இயல்கின்றது. சில செயல்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/94&oldid=775218" இலிருந்து மீள்விக்கப்பட்டது