பக்கம்:நல்ல தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கியங்கள் 89 ஞாயிறு திங்கள் அறிவே நர்னே கடலே கானல் விலங்கே மரனே புலம்யுறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால் சொல்லுரு போலவும் கேட்குக போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்' (தொல் பொருள். 502) என்று தொல்காப்பியரும், கேட்குந போலவும் என்று நன் னுாலாரும் இதற்கு இலக்கணம் வகுத்தாலும், அவை செய்யுள் நடைக்கு உரியனவே அன்றி, உரை நடைக்கு உரியவை யாகா. இந்தத் தொல்காப்பியச் சூத்திரம் செய்யுள் இயலிலேதான் வந்துள்ளது; இந்த வேறுபாட்டை நன்றாக ஆராய்ந்து, எழுவாய் பயனிலை மாறாத வகையில் இனிய தனி வாக்கியங்களை எழுதக் கற்று நல்ல தமிழ், வளர்ப்போமாக! இனி, இத்தொடர் அமைப்பில் நம்மை அறி யாது செய்யும் வேறு சில தவறுகளையும் அவற்றின் திருத் தங்களையும் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/93&oldid=775217" இலிருந்து மீள்விக்கப்பட்டது