பக்கம்:நல்ல தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கல்ல தமிழ் 'டும். இது', எழுதியது' என்னும் இரு சொற்களுமே இவ் வாறு தவறாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இவையெல் லாம் மிக எளிமையாக நீக்கப்பட வேண்டுவன. சற்று எண்ணிப் பார்த்தால், மொழியின் அடிப்படையாகிய எழு வாய் வேற்றுமை அமைப்பைச் சிந்தித்தால், இந்த மிகச் சாதாரணமான பிழைகளை அறவே நீக்கிவிட இயலும். எனவே, ஒவ்வொருவரும் நல்ல தமிழ் அன்றானாலும் குற்ற மற்ற தமிழையாயினும் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும், மற்றவர்களுக்கு அறிவுறுத்தவும். விளக்கந் தரவும் பயன்படும் வானொலி, நாளிதழ் போன்ற வற்றுள் இத்தகைய மிகவும் சாதாரணப் பிழைகள் வாராமல் காத்துக்கொள்வது அவசியம். இன்று வண்டிகள் வாராது' என்று சொல்லுவது தவறு அல்லவா? வண்டிகள் என்ற பன்மை எழுவாய் வாராது’ என்ற ஒருமைப் பயனிலை கொண்டு முடியுமா? சற்று நினைத்தால் இந்த உண்மை நன்கு புலப்படுமல்லவா? இவ்வாறே உயர்திணைக்கு அஃறிணையை வழக்குவதும் உண்டு. காலம் மாற்றி வழங்குவது உண்டு. அவற்றை ஒரளவு வழு அமைதியாகக் கொள்ளலாம் என மேலே காட்டி னேன். என்றாலும், அந்த வழு அமைதி நிலையெல்லாம் செய்யுளுக்குத்தானே ஒழிய, உரை நடைக்கோ-பேச்சு வழக் குக்கோ-அல்ல என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, பேச்சிலும் உரை நடையிலும் எழுவாய்க்கும் பயணி லைக்கும் உரிய திணை, பால், எண், இடம் இவை மாறாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளல் இன்றியமையாததாகும். மொழியின் செம்மைக்கு இதுவே அடிப்படை, ஒரு சிலருக்கு இரண்டோர் ஐயம் தோன்றுதல் கூடும். சில இடங்களில் அஃறிணையை உயர்திணையாகக் கூறலாம் என இலக்கணம் வகுத்துள்ளார்களே?’ எனக் கேட்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/92&oldid=775216" இலிருந்து மீள்விக்கப்பட்டது