பக்கம்:நல்ல தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கியங்கள் 87 படி தனித்தனி சிறு வாக்கியங்களாகப் பிரித்துச் சொல்லி |ருெந்தால் எளிமையாய் இருக்கும். இருப்பினும், இத்தகைய இணைந்த சொற்றொடர்களும் மொழி இனிமைக்கு ஒரளவு தேவையாகவே உள்ளன. சிறு தனிச்சொற்றொடர்கள், சொல்உரம் பெற்றவை யாகிப் பொருளை விளக்குவதோடு, அப்பொருள் சிறக்கும் வகையில் வற்புறுத்தப் பெறுவதைக் காணலாம். காலஞ் சென்ற திரு. வி. க. அவர்கள் உரைநடையில் இந்தப் பண்பைக் காணலாம். அவர் நடையைக் கற்றாரும் மற்றாரும் ஆணும்-பெண்ணும்-ஒரு சேர விரும்பியதன் இரகசியம் அவர் தம் எளிய நடையின் இனிமையேயாகும். சங்க காலப் பாடல்களிலுங்கூட இந்த உண்மையைக் காணலாம், எனவே நல்ல தமிழ் எழுத விரும்புகின்றவர்கள், கூடிய வரையில் தொடர் வாக்கியத்தையோ இணை வாக்கியத்தையோ எழுதுவதை விடுத்துத் தனி வாக்கியங்களிலே பொருள் சிறக்க எளிய முறையில் நன்கு எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று உலகம் போற்றும் சிறந்த ஆங்கில அறி ஞரின் நூல்களின் நடை இதை வலியுறுத்தம். х வாக்கியங்களை எழுதுகின்றபோது பலர் சாதாரணத் தவறுகளையும் செய்துவிடுகின்றனர். ஒருமை பன்மையைப் பற்றி முன்னமே குறிப்பிட்டுள்ளேன், இங்கேயும் அதைக் கூற வேண்டியுள்ளது. இது மிக முழகியமாக எண்ண்த் தக்கது! நாம் நாள் இதழ்கள் பலவற்றில் இத்தகைய குறை பாடுகளைச் காண்கிறோம். வானொலியில் செய்தியைப் படிக்கும்போது வாசிப்பது இன்னார்’ என்கின்றனர். வாசிப்பது கல்யாணி’ என்றால், கல்யாணி அஃறிணையா? வாசிப்பவர்’ என்றல்லவா சொல்லவேண்டும்? இது எழு தியது இன்னார்' எனச் சாசனம் முதலியவற்றில் எழுதுவார் கள். இதை எழுதியவர்' என்று. அத்தொடர் இருக்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/91&oldid=775215" இலிருந்து மீள்விக்கப்பட்டது