பக்கம்:நல்ல தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்ல தமிழ் டிருக்க வேண்டுவதில்லை. அப்படிச் சொல்லின், ஒவ் வொன்றும் தனித்தனியாக நின்று தனி வாக்சியங்களாகவே முடியும். 'கற்பது நல்லது மட்டுமன்று; வாழ்வுக்கும் வழி காட்டு கிறது,' என்பதில் கற்பது என்ற ஒரே எழுவாய்க்கு இரு பயனிலைகள் (நல்லது, காட்டுகிறது) வந்துள்ளன. சிலர் இரண்டாவது பிரிவிற்கு மாற்றுப் பெயர்ச்சொல் (Pronoun) எழுதுவது உண்டு. கற்பது நல்லது மட்டுமன்று; அது வாழ் வுக்கும் வழி காட்டுகிறது,' என அந்த வாக்கியம் அமையும். இதில் அது தனி எழுவாயாக அமையினும், அரைப்புள்ளி இட்டு வாக்கியம் அமைத்திருப்பதால், இதையும் தொடர் வாக்கியம் என்று ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை.எனலாம். ஆசிரியர் கணக்கை வீட்டில் போடவேண்டும் என்று சொன்ன காரணத்தால், எனக்கு வீட்டில் வேறு வேகைள் இருந்த போதிலும், எனது உடல் நலம் சரியாக இல்லை என் றாலும், அவர் சொல்லிய படியே செய்ய வேண்டும் என்று கருதி, மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது, அக்கணக் கைப் போட்டு எடுத்துக்கொண்டே சென்றேன். இது இணை வாக்கியம். இதில் பல பொருள்கள் பிணைந்துள்ளன. ஆசிரியர் மாணவருக்கு இட்டபணி, அம்மாணவரின் வீட்டு வேலைகள், அவருக்கு உடல் நலம் இல்லா நிலை எனினும் ஆசிரியர் சொற்படி நடந்த பண்பு இத்தனையும் இதில் அடங் கியுள்ளன. எனவே, இது இணைப்பு வாக்கியமாகின்றது. இத்துணைப் பெருவாக்கியம் தேவையா? இல்லைதான். பின் ஏன் உண்டாயிற்று? இவர் தாம் கூற வேண்டிய பொருளை அழகுபடக் கோவையாக்கிக் கூற நினைத்திருக்கலாம்;. நீண்ட வாக்கிய அமைப்பின் திறன் காட்ட எண்ணியிருக்கலாம்; இடையில் பொருள் கெடாத அமைப்பையும் கருதியிருக் கலாம். எனவே, இவ்வாறு கூறுதல் இலக்கணப்படி தவறு அன்று. என்றாலும், இதையே பொருள் தொடர்பு கெடாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/90&oldid=775214" இலிருந்து மீள்விக்கப்பட்டது