பக்கம்:நல்ல தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கியங்கள் 85 ஆனால், அது நல்ல தயிழ் ஆகுமா? எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, எளிய இனிய தமிழ் எழுவதோடு அதற் குரிய அமைப்பில் நின்று வாக்கியங்களை எழுதுவதும் மிகச் சிறந்ததாகும். மூன்று வாக்கியங்களின் தன்மை இவைதாம்: தனி வாக் கியம் என்பது ஒர் எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்டு முடிவது. பயனிலைக்குச் செயப்படு பொருள் இருப்பினும் இருக்கலாம்; இல்லையானாலும் தவறு இல்லை. அது போன்றே எழுவாயே ஒன்று என்ற போது, அதனோடு தொடர்ந்து அந்த ஒரே பயனிலைக் கொண்டு முடிவதாக உள்ள வேறு சில சொற்களும் வரலாம். இராமன் வந்தான். இர்ாமன் மரத்தை வெட்டினான். இராமலும் கிருஷ்ணனும் கந்தனும் கோவிந்தனும் வந் தார்கள். - இவை மூன்றும் தனிவாக்கியங்களே. மூன்றாவது வக்ா கியத்தில் நான்கு எழுவாய்கள் இருப்பினும், அவை அனைத் தும் ஒரே பயனினைலயைக் கொண்டு முடிவதால் இது தனி வாக்கியமே, மற்றும் இந்த வாக்கியங்களின் பொருள்கள் மற்றவர்கள் விளக்க வேண்டாத வகையில் நன்கு விளங்கு கின்றன அல்லவா? இரண்டாவதாக உள்ன தொடர்நிலை வாக்கியம் ஒரே எழுவாயைக் கொண்டாலும் பல பயனிலைகளைக் கொண்டு முடிவதாகும். ஒவ்வொரு பயனிலையையும் நாம் முன் கண்ட குறுயீடுகளில் அரைப் புள்ளி (Semicolon) இட்டுப் பிரிக்க வேண்டும். மற்றும் அந்த ஒவ்வொரு பயனிலைக்கும் தனித் தனி திரும்பத் திரும்ப அந்த எழுவாயைச் சொல்லிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/89&oldid=775212" இலிருந்து மீள்விக்கப்பட்டது