பக்கம்:நல்ல தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நல்ல தமிழ் அதிலும், இன்று எல்லாரும்படிக்க வேண்டிய வகையில் நல்ல நூல்கள் வரவேண்டுமெனத் தமிழ் அறிஞரும் அரசாங்கத் தாரும் விரும்புகின்றனர். எனவே, உரைநடை எளிய வகை யில் அமைய வேண்டும். சங்க காலத்தில் உண்டான உரை நடை நூல்கள் வழக்கிழந்து அழிந்தமைக்கும், இடைக்காலத் தில் உண்டாகி இன்று ஏட்டளவில் உள்ள பல் உரை விளக்க உரைநடைகள் பலரால் விரும்பப்படாமைக்கும் காரணம் அவற்றில் எளிமை காணாமையேயாகும். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் இந்த நிலையைக் காண் கிறோம் பழைய ஆங்கில உரைநடை இரண்டொரு நூற்றாண்டுகளிலேயே மறக்கப்பட்டு விடுகின்றது. எனவே, தமிழில் கூடிய வரை தனி வாக்கியங்களையும், தள்ள முடியாத இன்றியமையாத இடங்களில் தேவையாயின் பிற வாக்கியங்களையும் அமைத்து எழுதப் பழகல் நலம் பயப்ப தாகும். இனி அவற்றின் அமைப்புக்களைக் கண்டு மேலே செல்லலாம். இங்கே மற்றொன்றையும் நினைக்க வேண்டியுள்ளது. முன் ஒரு முறை வேற்று மொழி தமிழில் வந்து வழங்குவது பற்றிக் குறித்தேன். அந்த வகையில் இங்கு வாக்கிய அமைப் பினைக் காணல் நலம். தமிழின் எம்மொழியையும் கற்கும் ஆற்றல் வாய்ந்தவன். அவனது ஆங்கிலப் புலமையை ஆங் கில நாட்டவரே மிக வியந்து போற்றியுள்ளனர். எனவே, எல்லா மொழியையும் கற்கவும் எழுதவும் அவனால் இயலும். ஆனால், ஒன்று: ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தமிழைத் தமிழாகவும் எழுத வேண்டும் என்ற அடிப்படையைச் சிலர் மறந்து விடுகின்றனர். இரண்டையும் இணைத்து எழுதுவதில் தவறில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். நம்முள் பலர் தமிழையும் ஆங்கிலத்தையும் விரவிப் பேசுவதைக் காண் இறோம். அப்படியே எழுதின் என்னாவது? பையன் ஸ்லேட் டையும் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான்.' என்று எழுதினாலும் பொருள் விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/88&oldid=775211" இலிருந்து மீள்விக்கப்பட்டது