பக்கம்:நல்ல தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கியங்கள் 83 நன்கு காட்டாத காரணத்தாலே எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பது அவர்கள் கருத்தன்று. எழுத்தையும் சொல்லையும் பகுத்துக் காட்டி விளக்கம் கூறிய பின், அச் சொற்கள்-சொற்றொடர்கள்-தொகை விரியாக அமைய வேண்டுவதைக் காட்டி, அவற்றின் அமைப்புக்களைக் கான விட்டுவிட்டார்கள். மற்றும் தமிழில் பாட்டும் உரைநடை யும் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்தன. என்றா லும், நாம் இன்று பண்டைத் தமிழ் என நம்முன் காண்பன வெல்லாம் பாட்டாகவே உள்ளமையின், அப்பாட்டின் இலக்கணத்தைத்தான் தொல்காப்பியர் செய்யுளியவில் காட்டியிருக்கின்றார். உரைநடை உண்டு என அவர் குத் திரம் குறிக்கின்றது. அந்த உரை நடையாகிய சொற் றொடர்களின் அமைப்பையும் அவர் குறித்துள்ளார். ஆகவே, அவற்றின் விளக்கம், மொழி வளர வளர, வளர வேண்டிய ஒன்றாக அமைந்துவிட்டது. இன்று, மேலை நாட்டார் நம் நாட்டிற்கு வந்து மொழி வளர்க்கத் தொடங் கிய பிறகு, உரைநடை அதிகமாக வளர்ந்து வருகின்றது. எனவே, அதற்கேற்பவே உரைநடையை விளக்கும் இலக்கண அமைதிகளும், குறியீடுகளும் அவை பற்றிய விளக்கங்களும் வளர்ந்து வருகின்றன. அந்த அடிப்படையிலேதான் உரை நடையை அல்லது வாக்கிய அமைப்பை இந்த மூவகைப் பிரிவில் அமைத்துள்ளார்கள். நான் முதலில் காட்டியபடி எளிய இனிய நடையில் எழுதுவது நலம் பயப்பதாகும். அதற்குத் தனி வாக்கியங் களே போதும். என்றாலும், சொல்லும் பொருளைத் திட்டமாகவும் தொடர்பு கெடாமலும் கூறவும், அப்பொரு ளோடு தொடர்புடைய வேறு சிலவற்றைச் சேர்க்கவும் பிற வாக்கியங்களும் இன்றியமையாது வேண்டப்படுவனவேயாம். ஆயினும், அவற்றைப் பொருள் விளங்காத வகையில் பின்னிப் பிணைத்து, எழுதினவரே திரும்பப் படிக்கத் திண்டாடும் நிலையில் அமைக்காது. எளிய வகையில் எழுத வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/87&oldid=775210" இலிருந்து மீள்விக்கப்பட்டது