பக்கம்:நல்ல தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நல்ல தமிழ் சிலர் தம் மனம் போன வழிகளில் இக்குறியீடுகளை இட்டு மொழிக் கொலை செய்கின்றனர் தேவை இல்லாத இடங் களிலெல்லாம் சிலர் அளவுக்கு மீறி இக்குறியீடுகளை இட்டுப் பொருளைக் கெடுக்கின்றனர். சிலர் இதை உபயோகிப்பதே இல்லை. இரண்டோருதாரணம் காட்டி அமையலாம். 'கல்வி, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தரும் என எழுதுதல் சரியாகும். சிலர் இவற்றுக்கு இடையில் உம்மையைச் சேர்த்தும் இக்குறியிட்டு எழுதுவார்கள். 'கல்வி, அறமும், பொருளும், இன்பமும், வீடும் பயக்கும்' என எழுதுவது தவறாகும். உம்மை இட்டபின் அக்குறியீடு தேவையில்லை. இவ்வாறே அரைப் புள்ளியிடுவதிலும் முக்காற்புள்ளி இடுவதிலும் தவறு நேர்தல் இயற்கை. முற்றுப் புள்ளியைப் பற்றி யாருக்கும் இக்காலத்தில் ஐயம் இல்லை இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் பழைய இலக்கண நூல்களுள் திட்டமான வரையறைகளும் முறை களும் இல்லை என்றாலும், இன்று ஆங்கிலம் முதலிய மொழி களின் அமைப்புக்களைக் கண்டும், சொல்லுக்கு இனிமையும் முறையும் அறிந்தும், இன்னின்ன குறியீடுகளை அமைத்தல் வேண்டுமென்று அறிஞர்கள் நன்கு திட்டமாக எழுதியுள் ளார்கள். அவற்றின் விரிவெல்லாம் இங்கு விளக்கின் பெரு கும். அவற்றைக் கண்டு அந்த முறைகள் தவறாத வகையில் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி மேலே செல்லுகிறேன். இனி வாக்கியங்களைப் பற்றிக் காண்போம். தனி வாக்கியம் (Simple), தொடர் வாக்கியம் (Complex), இணைப்பு வாக்கியம் (Compound) area eparapsurs வாக்கியங்களைப் பிரிப்டார்கள் என்பதை முன்னமே கண் டோம். இவை பற்றித் தமிழ் இலக்கணங்கள் அதிகமாகக் காட்டவில்லை. எனினும், இன்று ஆங்கிலத்தில் வழங்கும் அமைப்பை ஒட்டி இவற்றை நாம் வரையறுத்துக் தொள் கிறோம். தொல்காப்பியரோ, நன்னூலாரோ இவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/86&oldid=775209" இலிருந்து மீள்விக்கப்பட்டது