பக்கம்:நல்ல தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கியங்கள் 8t என்றாலும், இந்தக் குறியீடுகளை நம் தமிழ் ஒலைகளில் அதிகமாகக் காண இயலாது. அதனாலே பல ஏட்டுப் பிரதிகளில் பிழைகள் உண்டாவதையும் அவற்றைப் படி எடுப்பதில் தவறு உண்டாவதையும் காண்கின்றோம். இன்று தமிழில் செம்மையாகச் செய்யப்பட்ட இம்முறை பெரும்பாலும் ஆங்கிலத்தைத் தழுவியே மேற்கொள்ளப் பட்டது. மாத்திரையின் அளவு ஒரு நொடி. அந்த அடிப்படை யிலேதான் இந்த நிறுத்துக் குறிகள் அமைகின்றன. காற் புள்ளிக்கு (Cama ) ஒரு மாத்திரை அளவும், அரைப்புள்ளிக்கு (Semicolan ;) இரண்டு மாத்திரை அளவும், முக்காற்புள்ளிக்கு (Colan :) மூன்று மாத்திரை அளவும், முற்றுப்புள்ளிக்கு (Full stop ) நான்கு மாத்திரை அளவும் அளவாம் என்பர். இந்த அமைப்பாலேயே அவற்றின் பெயர்க் காரணங்களும் விளங்குகின்றன அல்லவா? இவைகளை இடமறிந்து முறை யறிந்து பயன்படுத்த வேண்டும். அன்றேல், பெருந்தவறு களெல்லாம் நேரும். ஆங்கிலத்தில் இவற்றிற்கெல்லாம் நல்ல உதாரணங்கள் Girl Goričár “Kill him not, bring him,' assify arqpg. #'amaróðalso “Kill him, not bring him’ என்று எழுதி உத்தரவிட்டாராம். முடிவு என்ன? எப்படி இருக்கும்? அந்தக் காற்புள்ளி இடம் மாறியதால் கொல்ல வேண்டா எனக் கூற நினைத்தமைக்கு மாறான செயலே நிகழ்ந்தது. தமிழிலும் பிற மொழிகளிலும் இப்படிப்பட்ட அமைப்புக்கள் உள. எனவே, இக்குறியீடுகள் சொல் அமைப்பில் இனிமையும் ஒழுங்கும் காட்ட வருவதோடு நினைத்த பொருளை மாறாது காட்டவும் நன்கு பயன்படு கின்றன என்பதை அறிய வேண்டும். எனவே, நல்ல மொழிக்கு இவையும் இன்றியமையாது வேண்டப் பெறு கின்றன. . இவ்வமைப்பு, பெரும்பாலும் ஆங்கில மொழி நாட்டில் பரவிய பிறகே சிறப்பாக வளர்ந்தது. என்றாலும், இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/85&oldid=775208" இலிருந்து மீள்விக்கப்பட்டது