பக்கம்:நல்ல தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நல்ல தமிழ் தொழிற் பெயர் 1. தொழிலுக்குப் பெயராய் வருவது. பெரும்பாலும் காலம் காட்டாது. 2 3 படர்க்கை இடத்திற்கே உரியது. வினையால் அணையும் பெயர் 1. தொழிலைச் செய்த பொருளுக்குப் பெயராய் வருவது, 2. காலம் காட்டும். 3 மூவிடத்துக்கும் உரியது. இத்தகைய வேறுபாடுகளையெல்லாம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டுமா என்ற ஐயம் சிலருக்குத்தோன்றும். மேற் போக்காகப் பார்த்தால், வேண்டா என்று கூடச் சொல்லத் தோன்றும். ஆயினும், சற்று ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால், இவற்றின் அடிப்படைகளை விளங்கிக்கொண்டாலன்றி இவற்றை மொழியில் வழங்கும் போது இடர்ப்பட வேண்டும் என்பது தெரிகிறதல்லவா? ஒன்றை மட்டுமே காட்டிச் செல்லலாம் என நினைக்கின்றேன். ஏவல், வியங்கோள் இரண்டினையும் பார்ப்போம். தமிழ் மொழி மரியாதை வழங்கும் மொழி. ஆங்கிலத்தில் முன்னிலையில் யாராயிருந்தாலும் You என்று தான் சொல்லுகிறோம். வா' என்பதற்கு Come என்றுதான் சொல்லுகிறோம். மரியாதைக்கு வேண்டுமாயின், Please’ என்னும் வேறு சொல்லையும் சேர்த்துக்கொள்ளுகிறோம். அது அந்த மொழியின் மரபு. தமிழில் தனிச் சொற்களே அந்தச் சிறப்பைச் செய்கின்றன. முன்னுள்ளவர் தகுதிக்கு ஏற்ப நீ, நீர், நீங்கள் என வழங்குகின்றோம். தகுதி கருதி வா, வாரும், வருக என அழைக்கின்றோம். இதில் வா' என்பது ஏவல். வருக என்பது வியங்கோள். இவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/82&oldid=775205" இலிருந்து மீள்விக்கப்பட்டது