பக்கம்:நல்ல தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமும் தெளிவும் 79 வேறுபாடு அறியாவிட்டால், நாம் நிச்ஈயம் இடர்ப்படவே நேருமல்லவா? பணியாளனைப் பார்த்து வருக என அழைத் தலும், ஆசிரியரை வா’ என அழைத்தலும் கேலிக் கூத்தும் வெட்கக் கேடுமாமல்லவா? எனவேதான் இவை அனைத்தும், இவற்றின் வேறுபாடுகளும் அறிந்துகொள்ளுதல் நல்ல தமிழ் எழுதப் பயன்படும் எனக் காட்ட விழைந்தேன். இப்படியே பிற வேறுபாடுகளையும் உணர்ந்து, இவற்றால் மொழியின் நலம் காணல் சிறப்புடைத்தாகும். தமிழில் இப்படியே சில சொற்களின் அமைப்புக்களும் உள்ளன. ஆங்கிலத்தில் We’ என்ற சொல் படர்க்கை யாரையும், முன்னிலையாரையும் உளப்படுத்தி வழங்கும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைச்சொல்லாகும். We three came’, என்பது மூவகையிலும் பொருள்படுவதை எண்ணிப் பார்க்கலாம். தமிழில் நாம், நாங்கள் என்ற இரு சொற் களும் பொருள் நுணுக்கம் வாய்ந்தனவாம். 'நாம்’ என்ற போது முன் உள்ளவனையும் அது பிணிக்கிறது. நாங்கள்' என்ற போது அவனை நீக்குகின்றது. இந்தச் சிறு வேறு பாட்டால் மொழியின் நுண்மை விளங்குகின்றதன்றோ? இவ்வாறே பல சொற்களும் சொற்றொடர்களும் ஒவ்வொரு மொழியிலும் நன்கு அறிந்து பயன்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/83&oldid=775206" இலிருந்து மீள்விக்கப்பட்டது