பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நல்ல தீர்ப்பு

கிள்ளை: கேட்டாயா? என்ன சொன்னார்கள்?

சாலி : உனக்கு சொல்லியது போலில்லை.

கிள்ளை : அப்படியா. என்ன?

சாலி : "போகக்கூடாது"

கிள்ளை : ஏன் என்று கேட்டாயா?

சாலி : விட்டுவிடுவேனா?

கிள்ளை : உம்

சாலி :

ஏன் என்றேன். அதற்கு அவர்,... கேட்காதே!
[அனைவரும் சிரிப்பு]

முல்லை : உங்கள் ஆவல் நிறைவேறாததற்கு நான் வருந்துகிறேன்.

கிள்ளை : இளவரசியே, என்கண்ணே, என்னை என் பெற்றோர் "போ" என்று சொன்னாலும் நான் உடனே போயிருக்க மாட்டேன். ஏன் தெரியுமா?

முல்லை : இதென்ன புதுமை?

சாலி : ஏன்?

கிள்ளை :கொஞ்ச நாளைக்கு மிக்க வேலையிருக்கிறது.

முல்லை : உனக்கா?

சாலி: என்ன கூடை முறம் கட்ட வேண்டுமா?

கிள்ளை: நன்றாகக் கேட்டாய். நீ சொன்னது பாதி சரி

முல்லை: கூடை முறம் ஒரு பாதி கட்டவேண்டும்; மறுபாதி? இவைகளில் எது சரி?

கிள்ளை : "கட்டவேண்டும்"

சாலி : என்ன கட்டவேண்டும்?

முல்லை : விரைவில் சொல்லிவிடு?

கிள்ளை : மாலை கட்டவேண்டும். இளவரசிக்கு