பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நல்ல தீர்ப்பு

அரசர்: வாழி வாழி நான் அப்படிச் சொல்லவே மாட்டேன்.

[சாலி வருகின்றாள்]

சாலி : இளவரசியார் இருக்கிறாரா?

முல்லை : அப்பா சாலி இங்கு வரலாமா?

அரசர் : ஓ, நன்றாக !

முல்லை : சாலி உள்ளே வா!

[வருகிறாள், முல்லை கை காட்டுகிறாள். சாலி உட்கார்ந்தாள் பக்கத்தில்]

சாலி: பேரரசர், பேரரசியார் ஏதோ தனியாகப் பேசுகையில் நான் வந்தது இடையூறே என்னவோ, மன்னிக்க வேண்டுகிறேன்.

அரசி : அப்படி ஒன்றுமில்லை என் மாணிக்கக் கணையாழி மறைந்து விட்டது அது பற்றிய ஆராய்ச்சி. அரண்மனை ஆட்கள் எடுத்திருப்பார்கள். அல்லது பணிப்பெண்கள். இல்லை என்றால் அகப்பட்டு விடவும் கூடும்.

சாலி : இல்லையம்மா, கிள்ளை எடுத்தாள் !

முல்லை : கிள்ளையா?

கன்னல் : அப்படியா!

அரசர் : நீ எப்போது பார்த்தாய்?

முல்லை : நீ கண்ணால் பார்த்தாயா?

சாலி : இளவரசியே! நானும் கிள்ளையும் உன்னை விட்டுப்பிரிந்து போகையில், கிள்ளையின் இடை யினின்று சிறு பொருள் ஒன்று விழுந்தது. கிள்ளை நானறியாதபடி அதை எடுத்தாள். தவிந்த விரல்களின் புறத்தில், சிவந்த ஒளி