உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

29


முல்லை : உனக்கு நல்லதாயிற்று! வாழி வாழி,
                 உனக்கு ஏற்பட்ட தண்டனை உன்னை
                இனிக்க வைத்து விட்டதே ஆட்டம் உனக்கு
                ஒரே ஆண்டில் வந்துவிடுமே!
                                 [இதைச் சாலி கேட்டுத் திடுக்கிடுகிறாள்.
                                அவள் தனக்குள்]

               முல்லை அவள் மேல் அன்பாய் இருந்தது
               எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தச்
               சூழ்ச்சி செய்தேன், அதன் பயனாக அவள்
               நிலாவையடைந்து விட்டால், பிறை நாட்டின்
               பாராட்டும் புகழ்ச்சியும் கிள்ளைக்குத் தான்!........

              [அந்தச் சாலி, அரசனை நோக்கிக் கூறுகிறாள்]

              பேரரசே! குற்றவாளியாகிய கிள்ளை அந்தப்
             பீலி நாட்டில் ஆடல் கற்றுக்கொள்ளலாகாது என்று
             தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.

              [அரசர் முதல் அனைவரும் சிரிக்கின்றனர்,
              சாலியின் தந்தையான அமைச்சன் முகம்
              கவிழ்ந்து கொள்ளுகிறது]

அரசர் : சாலி, உனக்கு யார்மேல் எப்படிப்பட்ட
             கெட்ட எண்ணம் உண்டாகிறதோ அதை
             யெல்லாம் நான் தீர்ப்பாகச் சொல்லித்
             தீர்த்துவிட வேண்டுமோ? உன் வாய்ச்
             சொல்லைக்கொண்டு கிள்ளையைத் தண்டித்தது
             சரியில்லை என்று நன்றாக விளங்கிவிட்டது.

கிள்ளை : அப்படியானால், தாங்கள் எனக்களித்த
            தீர்ப்பை மாற்றவா போகிறீர்கள்?
                                         [அனைவரும் சிரிக்கிறார்கள்]

அரசர் : அஞ்ச வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை