பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

31

கிள்ளை : நான் இப்போதும் குற்றவாளியில்லை. அப்போதும் குற்றவாளியில்லையே, தீர்ப்பை ஏன் மாற்ற வேண்டும்?

அரசர் : அப்படியா நீ சொல்வதும் ஒரு வகையில் சரியே நீ என்ன சொல்கிறாய், சாலி!

சாலி : நான் தான் குற்றவாளி , எனக்குத்தான் அந்தத் தீர்ப்பை ஏற்பாடு செய்யவேண்டும்.

அரசர் : அது ஏன்? நீ எப்படிக் குற்றவாளி?

சாலி : நான்தான் முதலில் அந்தக் கணையாழியை எடுத்தேன். பிறகு வைத்து விட்டேன். ஆகையால் நான்தான் குற்றவாளி.

[சிரிப்பு]

பேரரசி : எவ்விடத்திலிருந்து எடுத்தாய்?

சாலி : அங்குத் தான்.....

பேரரசி : எங்கு?

சாலி : தாங்கள் நீராடும் கட்டத்தின் இப்புறமிருந்த கண்ணாடிச் சிலையின் கீழிலிருந்து எடுத்தேன்

பேரரசி : எங்கு வைத்தாய்?

சாலி : அங்குதான் வைத்தேன்.

பேரரசி : இல்லை இல்லை. நீ கணையாழியை எடுக்கவுமில்லை; வைக்கவுமில்லை. ஆடல் கற்றுக் கொள்ள விரும்புகிறாய் நிலாவிடம் பாவை விளக்கின் அடியில் கணையாழியை நான் வைத்து மறந்தேன். இப்போது தான நினைவு வந்தது.

அரசர் : ஆனால், நான் உனக்குத் தீர்ப்புக் கூறட்டுமா சாலி?

கிள்ளை : எனக்களித்த தீர்ப்பு மாறுதல் கூடாது!

அரசர்: அதையும் மாற்றித்தானாக வேண்டும். கேளுங்கள் சாலி நல்ல பெண்ணாகிய கிள்ளை மேல் பொய்ப்பழி கூறியதால் சாலி கிள்ளையை மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நிறைவேறிய பின், அரண்மனைப் பொருளில் ஆடல் அரங்கு ஒன்று அமைத்து, இந்நாட்டின்