பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நல்ல தீர்ப்பு

மண்டும் களைகள் தமை
நண்டு நிகர் விரல்கள்
கொண்டு களைவதொரு காட்சி!
கெண்டை உலவுகையில்
பெண்டிர் விழிகள் தமைக்
கண்டு நாணும், என்ன
தொண்டை இனிய கற்
கண்டோ மலரில் வரும்
வண்டோ? என இசைக்கும்
தண்டமிழ் இசை பாடிக்

களை யெடுத்தார் பல பெண்கள்

கூந்தல் அவிழ்ந்து விடும்
வாய்ந்த அருவிபோல்!
ஏந்தி முடிக்கும் அவர் அங்கை!
சோர்ந்தே விழுந்து விடும்
மேலுடை, நூலிடையில்
தூக்கிச் செருகும் அவர் செங்கை!
ஆர்ந்த மயிலினங்கள்
ஆடுகையில் தாள் பெயர்ந்து!
தீர்ந்த இடத்தை விட்டுத்
தீராத நன்செய் இடைக்

களை யெடுத்தார் பல பெண்கள்!

அரசி கன்னல்: ஆ! நான் எங்கே இருக்கின்றேன்? மகிழ்ச்சியன்றி மற்றொன்றும் இல்லாத இன்பஉலகிலா!

முல்லை: என் நினைவு என்னிடம் இல்லையம்மா! இளவரசி நிலவு ஒருத்தி அவள் ஆடத் துவக்கியவுடன் அவளிடம் களை எடுக்கும் பெண்கள் பலரைக் கண்டேன் அம்மா!