பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


படியே வீட்டுக்குள் கொண்டுவந்தாள். விஷயத்தை அறிந்து மாடியிலிருந்த முதலியாரும் ஓடி வந்தார். இருவரும் சேர்க்து அதற்கு உயிர் கொடுக்க முயன்றார்கள். அதன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள் ; வாயைத் திறந்து சிறிது தண்ணீர் ஊற்றிப் பார்த்தார்கள். உயிர் இருக்தால்தானே, அது தண்ணீரைக் குடிக்கும் !

பாவம், கஸ்தூரி இறந்துவிட்டது! முதலியாருக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

"ஐயோ, என்ன பண்ணுவது ? இது முரளிக்கும் சீதாவுக்கும் தெரிந்தால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்! நமக்கே இப்படி இருக்கிறதே! வீரன்தான் இதனிடத்தில் எவ்வளவு அன்பாக இருந்து வந்தது! அதுதானே இதை இங்கே அழைத்து வந்தது!” என்று கைகளைப் பிசைந்தாள் முதலியாரின் மனைவி.

"சரி, நடந்தது நடந்துவிட்டது. இதை இப்படியே போட்டு வைத்தால் குழந்தைகளும், வீரனும் இதைப் பார்க்க கேரிடும். பார்த்ததும் கதறிவிடுவார்கள். இதை நமது தோட்டத்தில் ஒரு மூலையில் புதைத்துவிடுவதே நல்லது” என்றார் முதலியார்.

"அது சரி, பள்ளிக்கூடம் விட்டு வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன பதில் சொல்வது ? வீட்டுக்குள் நுழைந்ததும் 'கஸ்தூரி எங்கே ’ என்று கேட்பார்களே !” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள் முதலியாரின் மனைவி.

“என்ன சொல்வது கஸ்தூரி எங்கிருந்தோதானே வந்தது . அது வந்த இடத்திலிருந்து ஆட்கள் வந்தார்கள் ; வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள், என்று சொல்லிவிட்டால் போகிறது. வேறு வழியில்லை” என்றார் முதலியார்.

12