பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.“ஓ! நான் காலையில் எழுந்தவுடனேயே புறப்பட்டுப் போகிறேன். போய், கஸ்தூரியைக் கையோடு கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் இப்போது முரண்டு பண்ணாமல் நீங்கள் சாப்பிட்டால்தான், நான் கஸ்துாரியை வாங்கி வருவேன். என்ன, சாப்பிடுகிறீர்களா ?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார் முதலியார்.


நல்ல நண்பர்கள்.pdf


உடனே, முரளியும் சீதாவும், “ஏனப்பா, நிஜமாகவா ? அப்படியானால் சாப்பிடுகிறோம்” என்று சந்தோஷமாக தயாராக இருந்தது, ஆனால், வீரன் வரவில்லை. அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருந்தது.

16