இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பள்ளிக்கூடம் போகலாம்
பள்ளிக்கூடம் போகலாம்
பாடங்களைப் படிக்கலாம்
துள்ளிவிளை யாடலாம்
தோரணம்போல் ஆடலாம்!
ஆசிரியர் அன்புடன்
அறிவுரைகள் சொல்லுவார்
ஆசையாகக் கேட்கலாம்
அறிஞராக ஆகலாம்!
நல்லநல்ல கதையெலாம்
நடிப்புடனே சொல்லுவார்
செல்லமாக இருக்கலாம்
சேர்ந்துபாடி சிரிக்கலாம்!
ஒற்றுமையாய் பழகலாம்
உண்மைஅன்பைக் காணலாம்
கற்கண்டாக இனித்திடும்
கல்விகற்று மகிழலாம்!
8