பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பள்ளிக்கூடம் பள்ளிக் கூடம் கலைக்கூடம் துள்ளும் சிறுவர்கள் தொழிற்கூடம் ! எண்ணும் எழுத்தும் இசைபாடும் இதயத்தில் என்றும் அசைபோடும் கண்ணும் கருத்தும் கலைதேடும் காவியக் கற்பனை அலையாடும்! உடலை வளர்க்கும் விளையாட்டு உறங்கிட வைக்கும் தாலாட்டு ! படிப்பை உயர்த்தும் கதைப்பாட்டு பண்பைக் கொடுக்கும் செவிகேட்டு. அன்பே மனதில் அரசாளும் அறிவே நினைவில் தினம்வாழும் இன்பம் நிறைந்தே கனியாகும் இனிக்கும் வாழ்வின் துணையாகும்!