பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குளிர்ந்த நீரில் குளிப்போம்



குளிர்ந்தநீரில் குளிப்போம்
குளுமையாக இருப்போம்
கலகலவென சிரிப்போம்
கையைவீசி நடப்போம்!

தைலம்உடலில் தேய்த்து
தடவிநன்குப் பார்த்து
காலைநேரம் முழுக்கு
கதறிஓடும் அழுக்கு!

சுறுசுறுப்பைக் கொடுக்கும்
சோம்பலையே அழிக்கும்
விரும்பிதினம் குளிப்போம்
வைத்தியரை மறப்போம்!

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/9&oldid=1341957" இலிருந்து மீள்விக்கப்பட்டது