பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலையில் எழுவோம்



காலையிலே எழுவோம்
கடவுளையே தொழுவோம்
காலைக்கடன் முடிப்போம்
குளிர்ந்தநீரில் குளிப்போம்

பாடங்களைப் படிப்போம்
புதிய ஆடை உடுப்போம்
பள்ளிநோக்கி நடப்போம்
பத்திரமாய் கடப்போம்!

அமைதியாக இருப்போம்
அடங்கிபாடம் கேட்போம்
அறிவைநாளும் வளர்ப்போம்
ஆசான்வழி நடப்போம்!

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/8&oldid=1341956" இலிருந்து மீள்விக்கப்பட்டது