பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நல்ல பிள்ளையார்

"எனக்கு வேகமாக றடக்க முடியாது” என்று உண்மையைச் சொல்லித் தன் பெருமையைக் குறைத்துக் கொள்ள மரவட்டை விரும்பவில்லை. 'இப்போதுதான் வயிறு நிரம்பச் சாப்பிட்டேன்; ஆகையால் இப்போது வேகமாக நடக்க முடியாது” என்று சொல்லி வைத்தது. ஆமையும் நத்தையும் அதையும் உண்மையென்று நம்பின. .

அப்போது ஒரு காக்கை அங்கே தத்தித் தத்தி வந்தது. அது மிகவும் கூர்மையான மூக்கை உடையதாக இருந்தது. கீழே இருந்த புழு பூச்சி களைக் கொத்தியது. அது இந்தப் பிராணிகளுக்குப் பக்கத்தில் வந்த போது, ஆமை அவசரமாகத் தன் தலையையும் காலேயும் சுருக்கி ஓட்டுக்குள் மறைத்துக் கொண்டு, சிறிய கல்லைப் போல் கிடந்தது, நத்தை யும் ஒட்டுக்குள் புகுந்து கொண்டு உருண்டைக் கல்லப்போலக் கிடந்தது. மரவட்டையோ சுருண்டு. படுத்துக் கொண்டது. - -

காக்கை அங்கே வந்து ஆமையைச் சிறிய கல் என்று எண்ணி அதை ஒன்றும் செய்யவில்லை. அப்படியே நத்தையையும் ஒரு விதமான கல்லென்று நினைத்து அதன் பக்கத்திலும் போகவில்லை, ஆளுல் மரவட்டையைக் கண்டதும் லயக்கென்று அதைக் கொத்திக்கொண்டு போய்விட்டது.

சிறிது நேரம் கழித்து ஒரு சந்தடியும் இல்லாமல் இருக்கவே, மெல்ல ஆமை தலையையும் கால்