பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 நல்ல பிள்ளையார்

மந்திரக்கோலே எடுத்துக் கொண்டான். கடவுளே! முனிவர் வாக்குப் பலிக்க வேண்டும். இந்தப் பூனை பெண்ணுக மாறவேண்டும். இந்தப் பூனே நான் அடித்துப் பெண்ணுக மாருமல் செத்துப் போனல் நானும் உயிரை விட்டுவிடுவேன். நீ எனக்குத் துணை யாக இருந்து இந்தப் பூனேயைப் பெண்ணுக மாறச் செய்யவேண்டும்” என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டான்.

கண்ணே மூடிக்கொண்டு ஓங்கி அந்தக் கோலால் அடித்தான். படார் என்ற சத்தம் கேட்டது. கண்ணே விழித்துப் பார்த்தான். அவன் முன்னே அந்த ராஜகுமாரி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்!

"அப்பாடி!' என்று பெருமூச்சுவிட்டான். அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன் தாயார் தகப்பனர் முன் போய் நிறுத்தினன். "இதோ இவளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்திருக் கிறேன். இவளேயே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்ருன்.

அந்தப் பெண் மிகவும் அழகியாக இருப்பதை அவர்கள் கண்டார்கள். இவளே எங்கே தேடிப் பிடித்தாய்?’ என்று கேட்டார்கள்.

அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் கல்யாணம் ஆகட்டும்' என்று வீரசிம்மன் சொன்