பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரப் பெட்டி 63

வந்திருந்த வேட்டிபுடைவைகளைக் கண்டு அவர்கள் பிரமித்துப் போனர்கள், "என்னடா கந்தா, நீ சாமி யாரிடம் போனயே ! அங்கே இப்போது இல்லையா ? ஏதாவது வியாபாரம் செய்கிருயா? இதெல்லாம் ஏது?’ என்று கேட்டார்கள். அந்த நிலையில் கந்தனைக் கண்ட அவர்கள் ஆனந்தக் கடலில் மூழ்கினர்கள்.

"நான் சாமியாரிடந்தான் இரு க் கி றேன். உங்களைப் பார்த்து வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டேன். வெறுங் கையாகப் போகாமல் இவற்றைக் கொண்டு போய்க் கொடு என்று அவரே கொடுத்தார்’ என்றன்.

‘சாமியாரா .ெ கா டு த் தா ர் ? அவருக்கு இதெல்லாம் எப்படிக் கிடைக்கிறது ? யாராவது கொண்டு வந்து கொடுக்கிருர்களா?' என்று அம்மா கேட்டாள். தன் பிள்ளை சாமர்த்தியசாலி ஆகிவிட் டான் என்பதில் அவளுக்கு மட்டில்லாத மகிழ்ச்சி.

"அந்தச் சாமியார் நிரம்பப் பெரியவர். அவருக்கு எது வேண்டுமானலும் கிடைக்கும். அது பெரிய ரகசியம். அதெல்லாம் சொல்லக் கூடாது?’ என்ருன் கந்தன்.

"யாராவது திருடர்கள் கொண்டு வந்து தரு கிருர்களா ?” என்று அப்பா கேட்டார்.

சே! அப்படி எல்லாம் பேசாதீர்கள். அவர் பெரிய மகான். எது வேண்டுமானலும் வருவித்துத் தருவார்.” . .