பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கறையும் இருளும்

ரவு நேரம். நாரையொன்று காற்றில் பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும் பட்டப் பகல்போல் ஒளி பரவியிருந்தது. அந்த ஒளியில் வெப்பம் இல்லை. குளிர்ச்சி நிறைந்த அந்த இன்ப ஒளி எங்கிருந்து வருகிறது என்று தேடித்தான் அந்த நாரை பறந்து கொண்டிருந்தது.

உலகமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை சென்ற இடமெல்லாம் அந்த ஒளி நிறைந்திருந்தது. நாரை சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது.

உயரத்தில் ஒளித்தகடு போல் வட்ட நிலா அழகுடன் விளங்கியது. நாரை அதன் அழகில் மயங்கி நிலாவையே பார்த்துக் கொண்டு நின்றது.

நிலா அழகாகத்தான் இருந்தது. உலக முழு வதும் ஒளி பரப்பும் பேரொளியைப் பெற்றுத்தான் விளங்கியது. ஆனால் அந்த ஒளி நிலாவின் இடையிலே ஓர் இருட்டுப் பகுதியும் இருந்தது. அது நிலவின் இடையில் ஒரு கறை போல இருந்தது.

இவ்வளவு அழகான நிலவின் இடையில் இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது.