பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வெப்பமும் குளிர்ச்சியும்

காலையில் கதிரவன் தோன்றினான். தன் ஒளியைப் பரப்பி உலகம் முழுவதையும் விளக்கம் செய்தான். கடல் நீர்ப்பரப்பின் மீதும் அவன் கதிர்கள் விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும் என்று கதிரவன் தன் ஒளியை மேன்மேலும் அதன் மீது பாய்ச்சினான்.

வெப்பத்தைத் தாங்க முடியாமல் கடல் முகம் சுருங்கியது. அதன் அலைகள் தளர்ச்சியடைந்து சிறுத்தன.

தான் அன்போடு கதிர் பாய்ச்சிக் கடலை அழகுபடுத்த முயலும்போது அது ஏன் முகத்தைச் சுருக்கிக் கொள்கிறது என்று கதிரவனுக்குப் புரிய வில்லை.

"கடலே, என்ன கோபம்? என்று கேட்டான் கடல் பதில் பேசவில்லை.

பதில் சொல்லக் கூட விருப்பமில்லாத அளவு தன் மீது கடல் கோபமாய் இருக்கக் காரணம் என்ன என்று சிந்தித்தான் கதிரவன்.

அப்போது காற்றரசன் அந்தப் பக்கமாக வந்தான்.