பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நன்னெறி மணி

கற்றறிந்த அறிஞர் பெருமக்களை மேன்மக்களே மதிப்பர். கீழ்மக்கள் அவ்வாறு அவரைப் போற்றி மதிப்ப தில்லை. புளிச்சோறு வாழைப்பழத்தை வெறுத்து ஒதுக்கு கிறது. பாற்சோறோ விரும்பி வரவேற்கிறது. (96)

பிறருக்கு உதவுகிற நன்மக்கள் கெட்டுப் போயிருப்பதைக் கண்டால் எவரும் இளகி உதவி செய்வர். கேடு விளைவிக்கும் மக்கள் வாடி வருந்துவதைக் கண்டால் எவரும் என் செய்வர்? நெற்பயிர் வாடுவதைக் கண்டால் நீர் இறைப்பர். முட்செடி வாடுவதைக் கண்டால் எவரும் என் செய்வர். (97)

நல்லவர்களோடு கொள்ளும் நட்பு நாள்தோறும் வளர்ந்து நன்மை பயக்கிறது. அல்லாதவர்களோடு கொண்ட நட்பு அவ்வாறு ஆவதில்லை. நல்ல பிஞ்சுகள் நாள்தோறும் முற்றிக் கனியாகிப் பயன்படுகிறது. வெம்பிய பிஞ்சு கனியாகிப் பயன்படுவதில்லை. (98)

தீய குணமுள்ள மக்கள் இருவர் தம்முள் அதிகமாக நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் நட்பு தொடங்கிய, நாளிலிருந்தே தீமையும் தொடங்கி வளர்ந்து வரும். பூக்களானது செடியிலும் கொடியிலும் பூத்தாலும் அது பூக்கும் நாளிலிருந்தே மணம் வீசத் தொடங்கிவிடுகிறது. (99)

பொன்னும், மணியும் பூண்டுள்ள மன்னர்கள் கல்வியிலும், அறிவிலும் சிறந்த அறிஞர்களோடு ஒப்பாவதில்லை. காது, மூக்கு,கழுத்து, கைவிரல்கள் எவ்வளவுதான் நகை அணிந்து இருந்தாலும், அது அணியாத கண்ணுக்கு ஒப்பாவதில்லை. (100)