பக்கம்:நவக்கிரகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் 13

சென்ருர்கள். விருங்கில் வடை, வாழைப்பழம், தித்திப்புப் பட்சணம் எல்லாம் போட்டார்கள். சந்திரன் அவற்றை இலையிலே போட்டுக் கொள்ளாமல் கையில் வாங்கி வைத்துக்கொண்டான். மற்ற மூன்று பேர்களும் எல்லாவற்றையும் தாமே தின்றுவிட்டார்கள். விருந்து முடிந்த பிறகு அந்த நான்கு பிள்ளைகளும் வீட்டுக்குப் போளுர்கள். அன்னே, "எனக்கு என்ன கொண்டுவந்திர்கள்?' என்று கேட்டாள்.

"குழந்தைகளுக்குப் பட்சணமே போடவில்லை' என்று சூரியன் கையை விரித்தான். 'கொஞ்சமாகத்தான் போட்டார்கள். நானே தின்றுவிட் டேன்' என்று வருணன் சொன்னன். 'கான் உனக்குக் கொண்டுவர வேண்டுமென்பதை மறந்துவிட்டேன்' என்று வாயு கூறினன். சந்திரன் மட்டும் தான் கொண்டுவந்திருந்த பட்சணங்களே அம்மாவிடம் கொடுத் தான.

அன்னேக்குச் சந்திரனிடம் இருந்த அன்பு பொங்கி வழிந்தது. "தோன் அப்பா எனக்கு உகந்த பிள்ளே உத்தமமான புத்திரன். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வயிறே பெரிதென்று எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட, நீ எனக்காகப் பட்சணங்களே எடுத்து வந்தாயே! உன்னுல்தான் எல்லோருக்கும் நன்மை உண்டாகும். உங்கள் நாலு பேர்களில் உன்னேத் தவிர மூன்று பேர்களேயும் உலகத்தார் வையட்டும். உன்னே மாத்திரம் எப்போதும் களிப்போடு வாழ்த்தட்டும்' என்று அவள் கூறினுள். அதனல் தான் இப்போதும் சூரியன் முதலியவர்களேச் சில சமயங்களில் மக்கள் வைகிருர்கள். கோடையில், 'பாழும் சூரியன் கொளுத்துகிருனே!” என்று சூரியனை வைவது உண்டு, அதிகமாக மழை பெய்தால், இந்த நாசகார மழை நிற்க மாட்டேன் என்கிறதே!' என்று வைகிருர்கள். இந்தப் பேய்க்காற்று கிற்குமா, கிற்காதா?’ என்று வாயுவுக்கும் வசை கிடைக் கிறது. ஆனல் சந்திரனே மாத்திரம் யாரும் வைவதில்லை. அதன் வரவை யாவரும் எதிர்பார்க்கின்றனர். சந்திரன் உதயமாகிவிட்டாலோ அதன் நிலவில் இன்பம் காணுகிருர்கள். நிலா கிலா வாவா, கில்லாமல் ஓடிவா’ என்று குழந்தைகள் குதூகலத்துடன் அவனே அழைக்கின்றன.

2

வேதங்களில் ச்ந்திரனே ஸோமன் என்றும், சந்திரமா என்றும் குறிக்கிருர்கள். சந்திரன் அமுதமயமானவன் என்றும், உலகில் உள்ள பயிர்களுக்கு வளர்ச்சி தருபவன் என்றும், ஸோமபானத்தை அருள்பவன் என்றும் வேதங்கள் சொல்கின்றன.

ஸோமனேப்பற்றி வேதங்களில் பல கதைகள் இருக்கின்றன.

ஸோமன் என்னும் அரசன் கந்தர்வனிடம் இருந்தான். அவனைத் தமக்கு நண்பனுகப் பெற்ருல் பல இன்பங்களே அடையலாமென்று தேவர் களும் முனிவர்களும் அவனே விரும்பினர்கள். கந்தர்வனிடமிருந்து அவனே அழைத்துவரும் வழி என்ன என்று ஆராய்ந்தார்கள். வாக்கை மங்கை யாக்கிக் கந்தர்வனே மயங்கச்செய்து, அவனிடமிருந்து லோமனேப் பெற்ருர்கள். இது ஐதரேயத்தில் வரும் கதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/20&oldid=584234" இலிருந்து மீள்விக்கப்பட்டது