பக்கம்:நவக்கிரகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - § புதன அறிவிற் சிறந்தவர்களைப் புதனுக்கு ஒப்பிடுவது வழக்கம். புத னேப் பூசித்தால் வித்தைகள் எளிதில் வரும் என்று சொல்வார்கள்.

இந்தப் புதன், சந்திரனுக்கும் தாரைக்கும் மகவாய் உதித்தவன். குரு வின் மனேவியாகிய தாரை, சில காலம் சந்திரனுடன் இருந்து கருவுற்ருள் பின் குருவின்பால் சென்றபோது புதன் உதித்தான். அவன் யாருடைய குழந்தை என்பதுபற்றி ஐயம் நேரவே, தாரை, சந்திரனுடைய குழந்தை' என்று சொல்லித் தெளிவுறுத்தினள். புதன் அறிவிற் சிறந்தவகை விளங்கினன். .

இளன் என்னும் அரசன் சுகுமார வனம் என்னும் இடத்துக்கு வேட்டையாடச் சென்ருன். அம்பிகையின் சாபத்தால் அந்த வனத்துக் குள் செல்லும் மக்களும் விலங்குகளும் பெண்ணுருவை அடைவர். இளன் என்னும் அரசனும் அவனுடன் வந்தோரும் மகளிராயினர். இளன் இளே ஆன்ை. .

அங்கே வந்த புதன், இந்த அழகி யார்?' என்று கவனித்தான்.

'கம்பெ னுங்கிரீ வக்குயில் அழகினைக் காணு

அம்ப ரத்தினிற் சசிசுதன் அனங்கசா யகத்தால் வெமடி நெஞ்சன் இம் மின்னிடை எவள்ளன உள்கி. நம்ப ல்ை இறை நாரிஆ யினசெயல் அறிந்தான்.' அதன்பின் இளையுடன் இருந்த அரிவையரைப் பார்த்து, நீங்கள் கிம்புருடர்களைக் கணவராகப் பெற்று o இன்புறுக’ என்று கூறி, அவர்களே - அனுப்பிவிட்டு, இளேயுடன் இன்புற லாளுன.

இளே, அம்பிகையின் வரத்தால் ஒரு மாதம் ஆணுகவும் ஒரு மாதம் பெண்ணுக வும் மாறி மாறி வாழ்ந்தாள். பெண்ணுக இருக்கும்போது புதனோடு இணேந்து வாழ்ந்தாள். அதனுல் கருவுற்றுப் புரூரவா என்ற மகனேப் பெற்ருள்."

இளன் ஆணுகவும் பெண்ணுகவும் மாறி மாறி வாழ்வதை மா ற் ற புதன்

1. ஐயங்கார் பாகவதம், குருகுல மரபுப்படலம், 21 . . .

கம்பெனும் கிரீவக்குயில் - சங்கைப் போன்ற கழுத்தையுடைய குயிலைப் போன்ற பெண்; அம்பரம் - வானம்; சசிசுதன் - புதன்; அனங்க சாயகம் - காமனது அம்பு, மின்னிடை - மின்னலைப்போன்ற இடையை உடைய பெண்; உள் கி - எண்ணி; நம்பனல் - கடவுளால் இறை - அரசன்: நாரி - பெண். -- " . . . -- , -

2. பெருந்திறற் புதனெனும் பெயரிஞன் முனம், திருத்திழை இளையெனச் செப்பு மங்கையாம், ம்ருந்துறழ் சாயலை மணந்து பெற்றனன், பெருந் தவர் வணங்குவேற் புரூர வாவையே. (பாகவத புராணம், 9. 12:13.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/36&oldid=1006459" இலிருந்து மீள்விக்கப்பட்டது