பக்கம்:நவக்கிரகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருகஸ்பதி, 37

காமம். பீதாம்பரர், யுவர் என்பவை, இவருடைய பொன்னடையிலுைம் இளமைத் தோற்றத்தாலும் வந்த பெயர்கள். த்ரிலோகேசர், ல்ோக பூஜ்யர், கிரகாதீசர் என்பவை இவருடைய தலைமையை வெளிப்படுத்தும். கருணே நிரம்பியவராதலின் தயாகரர் என்ற பெயர் வந்தது. இன்னும் திேஜ்ஞர், திேகாரகர், தாராபதி, கிரகபீடாபஹாாகர், ஸெளம்யமூர்த்தி முதலிய பெயர்களும் உண்டு.

முத்துசாமி தீட்சிதரவர்கள் தம் கீர்த்தனேயில் குருவைப் பிராம்மண குலத்தில் உதித்தவர் என்று பாராட்டுகிருர். மிக்க வலிமை உள்ளவர், ஸர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலியவர்களுடைய வழி பாட்டுக்கு உரியவர், திருமால் முதலியவர்களால் புகழ் பெறுபவர் என்று போற்றுகிருர். இவர் திருக்கரத்தில் வச்சிராயுதம் இருப்பதாகச் சொல் கிரு.ர். தம்பால் வந்து பணிந்தவருக்குக் கற்பகம்போல் வேண்டியவற்றை அருளுகிறவர் பிருகஸ்பதி. ஏழைக்கு இரங்குபவர்; பரை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நால்வகை வாக்குக்களின் உருவை விளக்கு கிறவர்: கருணேக் கடல்; தூயவர்: திே சாஸ்திர ஆசிரியர்; களங்க மற்றவர்.

பிருகஸ்பதி இயற்றிய திே நூல் ஒன்று உண்டென்று கூறுவர். திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் ஒரிடத்தில், தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத் துப் பின் நீதி நூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்” என்று எழுதுகிருர், அதிலிருந்து சுக்கிரதிே என்ற நூல் இருப்பதுபோல, பிருகஸ்பதியின் பெயராலும் ஒரு திே நூல் வழங்கி யிருக்கலாமென்று தெரிகிறது.

3。

இந்தப் புத்தகத்தில் காட்சி அளிக்கும் பிருகஸ்பதி தாய்மைக்கும் அறிவுக்கும் உறைவிடமாக விளங்குகிருர் குடை முடி, சதுரமான பீடமுள்ள தேர், அதில் இரண்டு குதிரைகள் ஆகியவை அவருடைய தலைமைக்கு அடையாளங்கள். சாந்தமான பார்வை, உடம்பில் அணிந்த ருத்திராட்ச மாலைகள், கையிற் பிடித்த ஜபமாலை, ஞான முத்திரை காட்டும் கரம், ஒரு கையில் உள்ள யோக தண்டம், மற்ருென்றில் உள்ள கமண்டலம் ஆகியவை அவருடைய ஞானச் சிறப்பைக் காட்டு கின்றன. அவருக்கு அருகில் தாரை வீற்றிருக்கிருள். அவளுடைய உருவம் சிறியதாக இருப்பது பிருகஸ்பதிக்குமுன் காமம் சிறுமையடை வதைக் காட்டுகிறது. பின்னே மேருமலையின் தோற்றத்தைக் காணலாம். . . . . . . - வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பிரமதேவன் அமர்ந்திருக்கிருன். மூன்று முகங்கள் முன் தோன்ற மற்றென்று பின்னே மறைந்திருக்க அவன் காட்சி அளிக்கிருன். இடப்புறத்தில் பிரத்யதிதேவதையாகிய

1 திருக்குறள், 662, உரை: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/44&oldid=584258" இலிருந்து மீள்விக்கப்பட்டது