பக்கம்:நவக்கிரகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நவக்கிரகங்கள்

நவக்கிரகங்களை வழிபடும் முறைகளைச் சொல்லும் வடமொழி நூல் ஒன்றில் இன்ன இன்ன மந்திரங்களைக் கூறி இன்னவாறு சுக்கிரனைப் பூசிக்க வேண்டும் என்ற செய்திகள் வருகின்றன. - வெண்ணிறம் பெற்ற திருமேனியும் நாற்கரமும் திருமுடியும் உடைய வன் சுக்கிரன். பஞ்ச கோணமான பீடத்தையுடைய தேரை உடையவன். வெண்சந்தனம், வெண் மலர், வெண்மணிமாலே, வெள்ளாடை, வெண் குடை, வெண்ணிறக் கொடி ஆகியவற்றை உடையவன். மேருவை வலம் வருபவன். .

பத்மாசனம் உடையவன். கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவன். சடை முடியும் மரவுரியும் தரித்தவன். கிரக மண்டலத்தில் சூரியனுக்குக் கிழக்கே பஞ்சகோண மண்டலத்தில் வைத்துப் பூசிப்பதற்கு உரியவன்.

சுக்கிரனுடைய மந்திரத்துக்குரிய முனிவர் பாரத்துவாஜர்; சந்தம் த்ரிஷ்டுப்.

சுக்கிரனுக்கு அதிதேவதை இந்திராணி. பிரத்தியதி தேவதை இந்திர மருத்துவன். இவர்கள் தத்தமக்குரிய அங்கங்களுடன் விளங்குவார்கள்."

ஆனந்தமயமாக இருப்பதல்ை சுக்கிரனுக்கு உசான் என்ற பெயரும் உண்டு. பிருகுவினுடைய புத்திரனதலால் பார்க்கவன் என்ற பெயரைப் பெற்ருன். கவிகளில் சிறந்தவதைலால் கவி என்றும் காவியன் என்றும் பெயர் பெற்றன். வெண்சுடர் வீசும் திருமேனியுடையவனதலின் ஹிமா பன், குந்த தவளன், சுப்ராம்சு என்ற திருநாமங்களுக்கு உரியவன் ஆனன். வெள்ளாடையணுதலின் சுக்லாம்பரதரன் என்றும், வெள்ளணி யணிதலால் சுக்ல பூஷணனென்றும் பெயர் பெற்ருன். ஸாதி, ஆத்மவித், வேத வேதாங்க பாரகன், மஹாமதி என்பவை அவனுடைய அறிவுத் திறத்தை விளக்குபவை. நீதிஜ்ஞன், நீதிக்ருத், நீதிமார்க்ககாமி என்பன அவனுக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்தும் நாமங்கள். கிரகாதிபன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு. பிரபு என்றும் கருணு சிந்து என்றும் அவனுக்குச் சில திருகாமங்கள் வழ்ங்கும். தைத்ய மந்திரி, தைத்ய குரு என்பன அவனுடைய பதவியினல் வந்த பெயர்கள்."

சுக்கிரன் அக்கினி திக்குக்கு அதிபதி என்று சிலரும் கிழக்குத் திசைக் குத் தலைவன் என்று சிலரும் கூறுவர். அவனுக்குக் கருட வாகனம் இருப்பதாகவும் சொல்வர். அவன் களத்திர காரகன். மழை பெய்விக்க உதவுபவன் ஆதலின் மழைக் கோள் என்ற பெயருக்கு உரியவனைன். அப்பு என்னும் பூதத்துக்கு அதிபதியாகச் சொல்வதும் உண்டு. அவ னுக்கு இனிய சுவை தித்திப்பு: மணி வைரம், தானியம் மொச்சை; மலர் வெண்டாமரை: சமித்து அத்தி; கிறம் வெண்மை."

நவக்கிரகத்தின் துதியாக உள்ள கீர்த்தனங்கள் ஒன்றில் பூர் முத்து சாமி தீட்சிதரவர்கள் சுக்கிரனுடைய பிரபாவங்களைச் சொல்கிரு.ர்.

1. நவக்கிரக ஆராதனம், ! 2. நவக்கிரக ஸ்தோத்திர சங்கிரகம். 3. அபிதான சிந்தாமணி, г.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/53&oldid=584267" இலிருந்து மீள்விக்கப்பட்டது