பக்கம்:நவக்கிரகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனி பகவான்

4.

படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம். இவன் உருவமும் உடையும் அணியும் மணியும் மலரும், கருமையும் லேமும் உடையனவாக ஒவியர் எழுதியிருக்கிருர் சடையுடையவனாகவும் குலமும் வில்லும் அம்பும் பூண்டவனாகவும் காட்சி தருகிருன் சனி, வலக்கால், சற்றே மெலிந்து தோன்றுகிறது. இடப்பக்கத்தில், மேலே கும்பமும் முதலேயும் உள்ளன. அவை கும்ப ராசிக்கும் மகர ராசிக்கும் இவன் தலைவன் என்பதைக் குறிப்பிக்கின்றன. பின்னே உள்ள மேருமலை, சனி அதனை வலம் வருபவன் என்பதற்குச் சான்ருக கிற்கிறது.

5

3

பார்ப்பதற்கு அச்சத்தை விளேக்கும் உருவங்கொண்ட இவனுடைய வலப்பக்கத்தில் கீழே, எருமைக் கடாவின்மேல் யமன் அமர்ந்திருக்கிருன். இவன் சனிக்கிரகத்தின் அதிதேவதை. இடப்பக்கத்தில் பிரத்தியதி தேவதையாகிய பிரஜாபதி ஆசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் தோன்றுகிருன்.

சனியை ஆயுஷ்காரகனகச் சொல்வது சோதிட நூல். இவனே வழி பட்டு இவனுடைய அருளுக்கு உரியவர்களானல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இவனைப்போல் கெடுப்பவரும் இல்லை; இவனேப்போல் கொடுப்பவரும் இல்லை.

வெய்யசுட ரோன்சாயை மேவுமகன், சூற்கரத்தான் பைய நடக்கின்ற பங்கு, கரு-மெய்யன் இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியன், சனியன்.அவன் சீற்றம் தவிர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/60&oldid=584274" இலிருந்து மீள்விக்கப்பட்டது